இன்றைய சமூகத்தை மனிதநேயமிக்க சமூகம் என்று கூறுவதை விட அந்த மனிதநேயத்தை கூட விளம்பரமாக்கும் சமூகம் என்று கூறலாம்.. ஏனென்றால் அனைத்தும் சமூக வலைதளம் ஆகிவிட்டது. நம்முடைய மனநிலை என்ன, வீட்டு நிலைமை என்ன, என்ன விரும்புகிறோம், என்ன படிக்கிறோம், எங்கு செல்கிறோம், அங்கு என்னென்ன செய்கிறோம், யாருக்கு உதவி செய்கிறோம், என அனைத்துமே எக்ஸ்ப்ளோர் என்ற ஒரு பெயரை பயன்படுத்தி திறந்த புத்தகமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையை இப்படி திறந்து புத்தகமாக வைப்பதில் எந்த தவறும் இல்லையே என்று கூறலாம் ஆனால் சிலர் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் பலர் அந்த வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு தாமும் இது போன்ற செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அப்படி செய்வதை தானும் வீடியோவாக எடுத்து வெளியிடுவோம் என்று நினைத்து பல காரியங்களில் ஈடுபடுகிறார்கள் உதாரணமாக ஆடம்பரமாக ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார், அது அவரது விருப்பம்!
ஆனால் அதனை பொது வெளியில் வெளியிட்டு பலருக்கும் அது போன்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையை தூண்டி விடுகிறார். அப்படி ஆசைப்பட்ட அனைவருமே தான் விரும்பியபடி திருமணத்தை செய்து கொள்ளும் நிலையில் இருந்தால் அவர்களுக்கு வேறு எந்த பிரச்சினையும் ஏற்படாது. ஆனால் அதுபோன்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல இடங்களில் கடனை வாங்கி திருமணம் செய்து கொண்டு பிறகு கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கி இருந்தாலும் கூட அவரை காப்பாற்றுவதை விட அந்த விபத்தை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு அதிக லைக் மற்றும் ஷரை பெற வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். இவற்றிற்கு பல வகையில் விழிப்புணர்வுகளும் கொடுக்கப்படுகிறது. இதனால் சிலர் சில இடங்களில் அனைத்தையும் சமூக வலைதளமாக்குவதை தவிர்த்தும் வருகின்றனர்.
ஆனால் தற்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகுந்த மோகமாக பார்க்கப்படும் சில விஷயங்களான திருமணம் திருமணத்திற்கு முன் பின் எடுக்கப்படும் போட்டோ ஷூட், தனக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்த அப்டேட்டுகள், கர்ப்பமாக இருக்கும் பொழுதும் ஒரு போட்டோ சூட் குழந்தை பிறந்தவுடன் ஒரு போட்டோஷூட் குழந்தையின் முதல் பிறந்த நாள் அன்று மிகப் பிரம்மாண்டமான விழாவை ஏற்பாடு செய்து கொண்டாடுவது போன்ற அனைத்துமே ஒரு இளம் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் மறக்காமல் மற்றும் மாற்றாமல் செய்து வருகின்றனர். அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமடைய வேண்டும் என்ற ஒரு நோக்கில் செய்கிறார்கள். இருப்பினும் திருமணம் மற்றும் வளைகாப்பு போன்றவற்றில் எடுத்துக் கொள்ளும் போட்டோ சூட்டுகள் கூட ஒரு தம்பதியினரின் விருப்பத்தில் எடுக்கப்படுகிறது. ஆனால் பிறந்த குழந்தைக்கு ஒரு போட்டோ சூட் மற்றும் அந்த பிறந்த குழந்தையின் முதல் பிறந்த நாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் அவர்களது விருப்பம் அந்தக் குழந்தைக்கு சில நேரங்களில் அசோவ்கரித்தை கொடுத்து விடுகிறது.
இதற்கு நல்ல ஒரு உதாரணமாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தன் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஒரு தம்பதிகள் கொண்டாடுகின்றனர். அப்பொழுது தொட்டியில் குழந்தை அமர்த்தப்பட்டு உள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் நிற்கின்றனர், ஆனால் திடீரென தொட்டியின் வலது மற்றும் இடது புறத்தில் இருந்து பிரம்மாண்டமான வெடிகள் பறக்கிறது. அதில் ஒரு வெடி தன் கட்டுப்பாட்டை மீறி குழந்தை மீதும் விழுந்து விடுகிறது. இதனை கவனிக்காமல் அந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். இதற்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் உங்களது சோ ஆப்ஃப்பிற்கு குழந்தை தான் பலிகாடா விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது மேலும் பொறுப்புள்ள பெற்றோர்களாக நடந்து கொள்ளுங்கள் என்ற அறிவுரையும் வலுத்து வருகிறது.