Cinema

இணையத்தில் வைரலான ஸ்ருதி வீடியோ... அதென்ன கழுத்துல.... ஓ விஷயம் அப்படி போகுதா...?

KAMALHASSAN , SHURUTHIKHASSAN
KAMALHASSAN , SHURUTHIKHASSAN

கமலஹாசன் இந்திய திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். இவரது குடும்பமே சினிமா துறை சார்ந்த குடும்பம் என்பதால் குழந்தையிலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்ற கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  ஜனாதிபதியிடமே விருது பெற்றார். அதற்குப் பிறகு நடனத்தில் தனது ஆர்வம் உள்ளது என்பதை கண்டறிந்து துணை நடன ஆசிரியராகவும் சில திரைப்படங்களில் பணியாற்றி அரங்கேற்றம் என்ற திரைப்படத்தின் மூலம் வாலிப வயதில் நடிகராக அறிமுகமானார். இதற்குப் பிறகு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அனைத்துமே ஒவ்வொரு விதமான கதையையும் கதாபாத்திரத்தையும் கொண்டிருந்தது. மேலும் தனது உருவத்தையும் வேதத்தையும் மாற்றி நடிக்கும் தன்மை கொண்டவர் கமலஹாசன். இதனால் சினிமா துறையில் இவர் பெறாத விருதுகளை இல்லை என்றும் கூறப்படுகிறது.


இப்படி சினிமா துறையில் கொடி கட்டி பறந்த கமலஹாசன் தற்போது அரசியலிலும் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.ஆனால் சினிமாவில் கமல்ஹாசனை ரசித்த பல ரசிகர்களுக்கு கூட அரசியலில் அவரது நகர்வுகள் ரசிக்கும்படியாக இல்லை! 2018 அரசியலுக்கு வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த கமலஹாசன் மதுரையில் ஒரு பெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி தனது கட்சி பெயர், கொடி என அனைத்தையும் தெரிவித்தார். மேலும், அரசியலுக்கு வருகிறார் சினிமாவில் இவர் நடிப்பாரா என்று கேள்வி எழுந்த பொழுது, சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் இன்றுவரை கடைபிடித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் என்ற தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி வரும் கமலஹாசன் அரசியலில் நுழைந்த ஆரம்ப காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பு பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திராவிடத்தை தூக்கிவிட்டு மொத்தமாக சமூக நீதியையும் சமத்துவத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கையை தாங்கி பிடித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.ஆனால், கமலஹாசன் காலப்போக்கில் தான் தாங்கிப் பிடித்த கொள்கையை மறந்து சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல் திமுக உடன் கூட்டணி அமைத்தார். இதற்கு கமலஹாசனின் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் அரசியலில் நுழையும் பொழுது கமலஹாசன் முதலில் திமுகவின் கொள்கைகளை எதிர்க்கும் வகையிலும் திமுகவை மொத்தமாக எதிர்த்து நிற்கும் ஒரு கட்சியாகவே தனது கட்சியை உருவாக்கினார். ஆனால் தற்பொழுது அதே கட்சியுடன் கூட்டணியில் கமலஹாசன் சேர்ந்தது அவரது கட்சி நிர்வாகிகளிடையேவும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்து சமயத்தை மறைமுகமாகவும் இந்து மக்களுக்கு ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற செயலை கமலும் தொடங்கியுள்ளார் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தியாக கொழுந்து விட்டு எரிகின்றது. 

இந்த நிலையில், கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அந்த வீடியோவில் கருப்பு உடையில் தனது கழுத்தில் கிறிஸ்துவ மதத்தின் சிலுவையை அணிந்து கொண்டு தான் கிறிஸ்தவர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற ஒரு நடையில் நடந்து வருகிறார். இதற்கு சமூக வலைதளங்களில், தன் தகப்பனை போல் நாத்திகன் என்கிற போர்வையில் சிறுபான்மையினருக்கு செம்பு தூக்காமல் வெளிப்படையாக நான் கிருஸ்தவத்தை தழுவியுள்ளேன் என காட்டிய மகளுக்கு வாழ்த்துக்கள்…என்று ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே சமயத்தில் நல்லவேளை தந்தையை போல் இவர் இல்லை என்ற கமெண்ட்களும் முன் வைக்கப்படுகிறது.