நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது, நாள் ஒன்றிற்கு நாடு முழுவதும் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றன, மேலும் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் முழு முடக்கம் நோக்கி சென்றுகொண்டு உள்ளன.
தமிழகத்தில் இறுதி நேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஞாயிறு அன்று அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து சேவைகளைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, இதே நிலை விரைவில் பொது முடக்கம் நோக்கி நகரலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பல்வேறு மாநில பிரச்சாரங்களில் ராகுல் கலந்து கொண்ட காரணத்தால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் உடல்நலம் தேறி மீண்டு வர வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்தனர்.
பிரதமர் மோடியும் ராகுல்காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என குறிப்பிட்டு ட்விட் செய்தார் ஆனால் ராகுல் காந்தியை மக்களவை எம் பி என குறிப்பிட்டு இருந்தார், எங்குமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றோ அல்லது முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்றோ பிரதமர் குறிப்பிட வில்லை. இது காங்கிரஸ் தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
பிரதமர் வேண்டுமென்றே எங்கள் இளம் தலைவர் ராகுலை மட்டம் தட்டுகிறார், எங்கள் கட்சியை சேர்ந்த ஆனந்த் சர்மா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போது, மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா என குறிப்பிடுகிறார், எங்கள் இளம் தலைவர் ராகுலை முன்னாள் காங்கிரஸ் தலைவர் என குறிப்பிட கூடாதா எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிடைக்கிற கேப்பில் எல்லாம் ராகுலை கலாய்பதே பிரதமருக்கு வேலையாக போச்சு என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.