Politics

மதுரை மீனாட்சியம்மன் ஏன் பச்சை நிற பட்டு மட்டும் எப்போதும் உடுத்துகிறாள் !! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!

மதுரை மீனாட்சியம்மன் ஏன் பச்சை நிற பட்டு மட்டும் எப்போதும் உடுத்துகிறாள் !! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!
மதுரை மீனாட்சியம்மன் ஏன் பச்சை நிற பட்டு மட்டும் எப்போதும் உடுத்துகிறாள் !! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!

பாண்டியர்கள், தெற்கே இருந்த ஒரு தீவில் இருந்து தற்போதைய மதுரைக்கு குடியேறியதாக வரலாறு கூறுகிறது. கல் தோண்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய பழந்தமிழரின் பழை குமரிக்காண்டமாகவும் இருக்கலாம். வரலாற்று ரீதியாக, பாண்டிய நாட்டின் சின்னம் மீன்.


கந்தர்வ லோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவர், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றார். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தார். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அதிகமான பக்தி கொண்டவள்.

ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.

அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, "என்ன வரம் வேண்டும் கேள்! "என்றார்.

அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள். அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.

மலையத்துவஜ பாண்டிய மன்னனும், காஞ்சனமாலையும் குழந்தை பாக்கியத்துக்காக பார்வதி, பரமசிவனை வேண்டி யாகம் நடத்துகின்றனர். மனமிரங்கிய பார்வதி, தான் வாக்கு கொடுத்ததை நிறைவேற்றும் பொருட்டு, தானே 3 வயதுப் பெண் குழந்தையாக நெருப்பில் இருந்து வந்து காஞ்சனமாலையின் மடியில் விழுகிறாள்.

குழந்தையைப் பார்த்து மகிழ்ந்து போன அரசனும், அரசியும் அந்தக் குழந்தை மூன்று தனங்களுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.அப்போது வானில் தோன்றிய அசரீரி, "இவளை ஒரு ஆண்பிள்ளை போல வளர்த்து பட்டத்து ராணியாக முடி சூட்டுங்கள். மணப் பருவம் வந்த உடன் அவளது மூன்றாவது தனம் மறைந்துவிடும்" என்று கூறுகிறது.

மீனாட்சி ஆணுக்கு நிகரான அனைத்து வகை போர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். மதுரையின் அரசியாக, மங்கையர்க்கரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.மூன்று தனங்களுடன் பிறந்த மீனாட்சி, எந்த மன்னனைப் பார்க்கும் போது ஒரு தனம் மறைகிறதோ, அவரையேதிருமணம் செய்து கொள்வார் என்று மலையத்துவஜ மன்னன் கூறுகிறான்.

பட்டாபிஷேகதிற்குப் பிறகு மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார் மீனாட்சி. பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார். அவ்வாறு கிழக்கு திசையில் அவர் சென்றபோது, அமராவதி நாட்டின் மன்னனான இந்திரன் மீனாட்சியுடன் போர்செய்கிறான். ஆனால் மீனாட்சியின் வீர பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்காமல் பணிகிறான். இப்படி ஒவ்வொருதிசையிலும் போர் தொடுத்து அனைவரையும் தன் காலில் விழச் செய்கிறார் மீனாட்சி.இதேபோல, கயிலாயத்தின் மீது படையெடுத்து செல்கிறார் மீனாட்சி. அங்கு குடியிருக்கும் சிவபெருமான் மீனாட்சியை யார் என்று அறிந்தவர் ஆதலால், உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ளச் செல்கிறார்.

படையுடன் வீரமுடன் நின்று கொண்டிருக்கிறார் மீனாட்சி. எதிர்ப்புறத்தில் சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் நெருங்கி வர வர அன்னையின் உள்ளத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வெட்கம் முடி சூடுகிறது.சிவபெருமான் அருகில் வர வர தனது கையில் இருந்த வாளைகீழே போட்டு விட்டு வெட்கத்தில் தலை குனிகிறார். அப்போது மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைகிறது. தனது மணாளனைக் கண்ட பூரிப்பில் ஆழ்ந்து நிற்கிறார்அன்னை .

அப்போது சிவபெருமான், "அங்கயற்கண்ணியே நீ என்று மதுரையம்பதியை விட்டு படையுடன் கிளம்பினாயோஅன்றே நானும் உன்னைப் பின்தொடர ஆரம்பத்து விட்டேன். இன்றுதான் உன்னை நேரில் காண்கிறேன். இனிமேல் நீயே என் துணைவி" என்று கூற அன்னையின் முகம் வெட்கத்தால் சூரியனைப் போல சிவந்தது. அன்றே அன்னையின் கரம் பிடித்தார் எம்பெருமான்.

திருகல்யாணத்தை காண தேவலோகவாசிகள், சித்தர்கள், முனிவர்கள் அனைவரும் திரண்டனர். பிரம்ம தேவன் முன்னின்று இத்திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். பாண்டிய மன்னரின் மருமகன் ஆனதால் சிவபெருமானுக்கு "சோமசுந்தர பாண்டியன்" எனும் பெயர் ஏற்பட்டது.

அன்னை பார்வதி மீன், கொடியை கொண்ட பாண்டிய மன்னர் பரம்பரையின் அரசியாக இருப்பதாலும், மீன் எப்படி எந்நேரமும் விழித்திருக்கிறதோ, அப்படி எந்நேரமும் தனது பக்தர்களை துன்பங்களிலிருந்து காத்து, அவர்களுக்கு அருள் புரிவதாலும் இங்கு வீற்றிருக்கும் அன்னை மீனாட்சி என அழைக்கப்படுகிறாள்.

மதுரை மீனாட்சியம்மன் ஏன் எப்போதும் பச்சை நிறத்தில் காட்டப்படுகிறார்?

புராணங்களின்படி, மதுரையை ஆண்ட மீனாட்சி அம்மன் இயற்கை அன்னையின் பச்சை நிறம் கொள்கிறார். மீனாட்சிசுந்தரர் கல்யாண கோலத்தில் மீனாட்சிக்கு கடம்பமரம் இருக்கும். மரம், செடி, கொடி,புல், பூண்டு என்ற அனைத்து பச்சை நிறமும் இயற்கை அன்னை மீனாட்சியே. மலையரசன் மகளை ஏற்கும் மீனாட்சிசுந்தரர் மரங்களை தாங்கும் மலையாக வெண்மை நிறம்  கொண்டிருப்பார். மலையில் எழும் நீறுற்றாக நீல வண்ணத்தில் பெருமாள் அருகிலிருப்பார். தன் வீட்டுப் பெண்ணை தாரை வார்க்கும் நிலையில் பெருமாள் கையிலிருந்து நீரூற்று சிவன் கைக்கு சென்று மீனாட்சியை வந்தடையும். நம் முன்னோர்கள் மிகவும் அறிவு திறன் கொண்டவர்கள். இயற்கையை ஏற்று  கடவுளாக வணங்கி போற்றி பாதுகாத்தவர்கள். மீனாட்சி கல்யாண திருக்கோலத்தை வணங்கினாலே அண்டசராசரங்களையும் வணங்கி விடுகிறோம். தினமும் திருக்கல்யாண தரிசனம் காண அனைவரது பூசை அறையிலும் மீனாட்சிசுந்தரர் கல்யாண காட்சி வைத்து வழிபடுதல் பெரும் சிறப்பை அள்ளித் தரும். 

மதுரையில் உள்ள கோவிலில், மீனாட்சி அம்மன் சிலை பச்சைக் கல்லால், அதாவது மரகதத்தால் செதுக்கப்பட்டுள்ளது. எனவே  மீனாட்சி அம்மன், "மரகதம்பாள்" அல்லது "மரகதவல்லி" என்றும் அழைக்கப்படுகிறார்..