திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த அதிமுக ஆட்சியில் பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து போராடிய பல சமூகநல போராளிகள் முழுமையாக தங்கள் பணியை செய்யாமல் ஓய்வு எடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது.
அதில் ஒருவர் பொன்வண்ணன் திரைப்பட நடிகரான பொன்வண்ணன், தன்னை இடதுசாரி,தமிழ் தேசியம், அம்பேத்கர்வாதி என்ற பல பரிணாமங்களை எடுத்து வருகிறார், பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த பல்வேறு பிரச்சனைகளை ஓவியமாகவும், மேடை பேச்சுகளிலும் பேசி வந்து இருக்கிறார் பொன்வண்ணன்.
ஆனால் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து வாய் திறக்காமல் இருந்தார் பொன்வண்ணன் இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் பொன்வண்ணன் மீது விமர்சனம் வைத்தனர், ஆளும் திமுகவிற்கு எதிராக என்ன நடந்தாலும் வாயை மூடி கொண்டு இருப்பது இதெல்லாம் என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாடு எனவும் பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த சூழலில் சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில் விமர்சனத்திற்கு பயந்து பொன்வண்ணன் ஸ்ரீமதிக்கு நீதி கேட்கும் வகையில் ஓவியம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் சமூகத்தை நேசிக்கும் பார்வையாளனாக இருப்பதை விட வேதனையான விடயம் வேறேதுமில்லை… என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில் பலரும் பொன்வண்ணனை விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் மட்டும் பார்வையாளர் வேஷம் ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதேனும் நடந்தால்மட்டும் போராளி வேஷம் போடுவது என வறுத்து எடுத்து வருகின்றனர்.