மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்துக்கான பத்ம பூஷன் விருது சமீபத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்கள் அந்த விருதை பிரேமலதா விஜயகாந்த் பெற்று கொண்டார். அப்போது சீனியர் அமைச்சர் ஒருவரை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் விஜயகாந்த். தேசிய முற்போக்கு திராவிட கழகம் பெயரில் கட்சியை தொடங்கி தமிழக சட்டப்சபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். தமிழகத்தில் அடுத்த தலைவர் விஜயகாந்த் என்றும் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று விஜயகாந்த என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல் நிலை பிரச்சனை ஏற்பட்டு அரசியலில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடல்நல பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் காலமானார்.
அப்போது, விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவை பெரிதாக பேசப்பட்ட நிலையில் அவருக்கு மத்திய அரசு சார்பில் பத்ம பூஷன் விருது வழங்குவதாக அறிவித்தது. இது விஜயகாந்த ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் இடையே பாராட்டை பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் பத்ம பூஷன் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. அப்போது விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கவில்லை இதனால் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இரண்டாம் கட்ட விழாவில் விஜயகாந்துக்கு விருது வழங்குவதாக பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
அந்த விழாவில், ஜனாதிபதி முர்மு பிரேமலதா விஜயகாந்திடம் விருதை பெற்றுக்கொண்டார், இதில் மகன் விஜயபிரபாகரன், சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். மேலும், பாரத பிரதமர் மோடி அவர்களும் மத்தியஅமைச்சர் அமித்ஷா மட்டும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் பிறகு பிரேமலதா விஜயகாந்த், சீனியர் மத்திய அமைச்சரை சந்தித்து பேசியதாக தகவல் வந்துள்ளது. அந்த சந்திப்பில், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தேமுதிக இருந்த நிலையில், அடுத்த தேர்தலில் பாஜக பக்கம் தேமுதிக செல்லலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பு குறித்து முழுமையான தகவல் ஏதும் வரவில்லை.
ஆனால், பிரேமலதா விஜயகாந்த் மத்திய அமைச்சரை சந்தித்தது என்பது அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. 2026ல் பாஜக தலைமையில் மிக பெரிய கூட்டணி அமைக்க தற்போது இருந்தே பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாதிப்பு என்பது அதிமுக என்றும் ஜூன் 4 பிறகு பல சம்பவங்கள் அரசியலில் நடக்கக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகிறது என்ன நடக்க போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.