Cinema

ஒரே ஷோ தான்... வேற லெவல் வைரல் பொண்ணு....

girl.
girl.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் போன வருடங்களாக தொடர்ந்து நடந்து கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சி தான் நீயா??நானா??.. இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருப்பவர்களை அமர்த்தி இரண்டு குழுவினர்களுக்கு இடையில் விவாதங்களும் நடத்தப்படும். அது எந்த குழுவை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகின்றனர் என்பதை அறிவிப்பார்கள். இதன் மூலம் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தையும் கூறிவரும் நிகழ்ச்சியாக இந்த நீயா நானா நிகழ்ச்சி அமைந்து வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும் நடுவராகவும் கோபிநாத் அவர்கள் இருந்து வருகிறார். 


அந்த தொலைக்காட்சியில் மிகவும் அதிக ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான பங்குனி வகித்து வருகிறது. சனிக்கிழமை தோறும் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இதனை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே எப்பொழுதும் உள்ளது. அதில் சமீபத்தில் ஒரு தலைப்பின் கீழ்  விவாதம் நடத்தப்பட்டது. அதில் பேசிய பெண் அதன் பிறகு பல விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் அவர் அதற்கான உண்மை காரணத்தை தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்தப் பெண் யார்?? அவர் செய்தது என்ன?? மற்றும் அவர் கூறிய விளக்கம் என்ன??? என்பதை பற்றி விரிவாக காணலாம்!!

சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சொன்னால் தான் செய்வியா என்று கேட்கும் மனைவிமார்களுக்கும், சொல்லாமல் எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லும் கணவன்மார்களுக்கும் விவாதங்கள் நடத்தப்பட்டது. அதில் ஒரு பெண் அவருக்கு எப்பொழுது காபி குடிக்க வேண்டுமோ அப்போதெல்லாம் அவரின் கணவர் வந்து காபி போட்டு கொடுத்தால் மட்டும்தான் குடிப்பாராம்!! அவர் கணவர் வருவதற்கு சற்று நேரம் ஆகிவிட்டாலும் கூட அவர் போட்டுக் கொடுக்கும் காப்பியினை குடிக்க மாட்டாராம்!! எனக்கு காபி கொடுக்கும் மைண்டே போய்விட்டது என்று கூறி கடைசி வரைக்கும் அந்த காப்பியினை குடிக்கவே மாட்டாராம்!!! இது குறித்து நீயா நானா நிகழ்ச்சியில்  இந்தப் பெண் மற்றும் அவரின் கணவர் இருவருமே கோபிநாத்தின் மத்தியில் விவாதத்தில் ஈடுபட்டு ஜாலியாக பேசிக்கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் இப்படி எல்லாம் கூட இருப்பாங்களா??அப்படின்னும், ஒரு கணவனை காப்பி போட சொல்லி பெண் இப்படி எல்லாம் செய்வது மிகவும் தவறானது என்று பல வகையில் விமர்சனங்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக தோன்றிய வண்ணமே இருந்து வந்தது!!!ஆனால் இதனைத் தொடர்ந்து ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த அந்தப் பெண் தன் கணவர் வேலையில் எப்போதும் மிகவும் பிசியாக இருப்பார். அதனால்தான் அவரை காபி போட சொல்லி வீட்டிற்கு அழைப்பேன். அவரும் வீட்டிற்கு வந்து காபி போட்டு கொடுப்பதால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பார். அவர் வேலையில் இருக்கும் பொழுது கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். மேலும் டீக்கடையில் சென்று காபி குடிங்க அப்படின்னு சொன்னா கூட குடிக்க மாட்டார். 

அதனால்தான் வீட்டிற்கு  நீங்க வந்து காபி போட்டு கொடுத்தால் தான் நான் குடிப்பேன் என்று அடம் பிடித்து அவரை வீட்டிற்கு வர வைப்பேன். அவரும் வீட்டிற்கு வந்து காபி போட்டு கொடுத்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி விட்டு அதன் பிறகு மீண்டும் வேலைக்கு செல்வார். மற்றபடி வீட்டில் சமைப்பது மற்றும் பாத்திரம் கழுவுவது போன்ற அனைத்து வேலைகளையும் நானே செய்து விடுவேன். நீயா நானாவில் ஜாலியாக பேசியது இவ்வளவு ட்ரெண்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார். அது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பெண்ணை பேட்டி எடுக்க தற்போது பல யூடுப் சேனல்கள் முயற்சித்து வருவதாகவும் வேறு தகவல்கள் கிடைத்துள்ளது...