Tamilnadu

அதிரடியாக சோதனை இட்ட காவல்துறை இதுதான் காரணமா சோதனைக்கு..!

Chakku Shankar
Chakku Shankar

அரசியல் என்று எடுத்துக் கொண்டாலே அதில் பல திருப்பங்களும் மறைமுகமான பல பேச்சுகளும் செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கும் அவற்றில் சிலவற்றை தெரிந்து கொண்டு பொது வழியில் முன்வைத்து அடுத்து எதிர்காலத்தில் அரசியலில் இதுதான் நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கணக்கிட்டு கூறுபவர்களையும் திடீரென அரசியலில் நடக்கும் சில செயல்களுக்கு ஆன கருத்தை முன் வைப்பவர்களையும் தான் அரசியல் விமர்சகர்கள் என்று கூறுகிறோம் ஏனென்றால் ஒருவர் தனது கருத்தை முன் வைப்பதற்கு முழு சுதந்திரம் அவருக்கு இருக்கிறது அப்படிப்பட்ட அரசியல் விமர்சகர்களின் மிக முக்கியமான நபராக தமிழகத்தில் பார்க்கப்படுவது சவுக்கு சங்கர். இவர் சவுக்கு என்ற youtube சேனலில் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.


அதுமட்டுமின்றி இவர் முன்வைத்த பல கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பூகம்பத்தையும் பரபரப்பையுமே ஏற்படுத்தியிருக்கிறது ஏனென்றால் தமிழகத்தில் ஆளும் கட்சி செய்யும் பல செயல்களையும் செய்யப் போகின்ற பல செயல்களையும் அதிரடியாக கூறி வருவதில் சவுக்கு சங்கர் முதல் அரசியல் விமர்சிகராக இருந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் கூறிய பல தகவல்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வைரல் ஆவதோடு நிஜத்திலும் நடந்து பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர் குறித்து அவதூறாக அவர் பேசியுள்ளதாக புகார்கள் எழுந்ததால் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் படி சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து  பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து கடந்த நான்காம் தேதி கைது செய்தனர்.

இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தாலும் திமுகவின் மகளிர் அணி குழு மட்டும் சவுக்கு சங்கரை விடுதலை செய்யக்கூடாது என பல கோஷங்களை எழுப்பியது. மேலும் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தையும் பலர் அடித்து நொறுக்கியதாக பரபரப்பான செய்திகள் வெளியானது. மேலும் அவர் கையிலும் படுகாயம் அடைந்து கட்டு போட்டிகளை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் போது பார்க்க முடிந்தது! இப்படி தொடர்ச்சியாக சவுக்கு சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள், காவல்துறையினர் சவுக்கு சங்கர் மீது அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர் என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து காவல்துறை தரப்பு! இதனை அடுத்து கஞ்சா வழக்கிலும் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக பாஜக மாநில தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு மண்டல எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது வறட்சி, வறுமை என மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யாத இந்த அரசு சமூக வலைத்தளத்தில் பதிவிடும் சில கருத்துக்களுக்கு தேவையில்லாமல் பலரை கைது செய்து வருகிறது என்று விமர்சனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து போலீசார் சோதனையை மேற்கொண்டுள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது இணையங்களில் வைரலாகி கொண்டு வருகிறது, அதோடு எதற்காக இந்த சோதனை என்று சில வட்டாரங்களில் விசாரிக்கும் பொழுது சவுக்கு சங்கர் பல ஆதாரங்களை முன்வைத்து திமுக மீது குற்றம் சாடியிருந்தார், அந்த ஆதாரங்கள் அனைத்தும் அவரது அலுவலகத்தில் தான் இருக்கும் அதனால் அவற்றை எடுக்கும்படி அறிவாலயத்திடமிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றியே காவல்துறை தரப்பில் இது போன்ற சோதனை மேற்கொள்ளப்படுகிறதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.