கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிற நிலையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட கண்ணு குட்டி அவரது மனைவி மற்றும் சகோதரர் மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக முக்கிய குற்றவாளி என சின்னதுரை என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால் இந்த கலாச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனாலை கொடுத்ததே சின்னத்துரை என்பவர் தான் என்பது தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவகாரம் திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் கேள்விகள் ஒவ்வொன்றிற்குமே திமுக தரப்பில் பதில் இல்லை என்பதும், திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுவெளியில் பேசிய ஏதேனும் உலறிவிடுவோமோ என பயந்து பதுங்கி வருகிற நிலைமையும் நிலவி வருகிறது. அதே சமயத்தில் காவல் துறையினர் கள்ளச்சாராயம் குறித்த விசாரணைகளையும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக முன் வைக்கப்படும் புகார்களையும் கையில் எடுத்து தீவிர சோதனை வேட்டையில் இறங்கி உள்ளது.
அந்த வகையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருந்துள்ளதும், தேனி மற்றும் மதுரை, திருவண்ணாமலை என பல பகுதிகளில் போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சியில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் வெறும் இழப்பீடு மற்றும் நிவாரண தொகைகளை மட்டும் அறிவித்துவிட்டு உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க கூட நேரில் செல்லாமல், இதற்கும் தனது மகன் உதயநிதியை அனுப்பி வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே சமயத்தில் திமுகவின் கூட்டணியில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பெருமிதத்தில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் தலைகுனிவில் எப்படி மக்களை சந்திக்க போகிறோம் நாம் நின்று வெற்றி பெற்ற தொகுதியில் கள்ளச்சாராய விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று, அதைக் குடித்து பலர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் ஆளும் தரப்பிற்கும் நமக்கும் அதிக பிரச்சனையையும் 2026 ஆம் ஆண்டு பொது தேர்தலில் இந்த விவகாரம் கண்டிப்பாக எதிரொளிப்பை பெறும், முதல்வர் வேறு இதுவரையிலும் அப்பகுதிக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்விகளும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது உடனடியாக நாம் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் இல்லையென்றால் இனி அந்த தொகுதிக்குள் நம்மால் நுழையவே முடியாது என குழம்பிப்போய் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயத்தால் உயர்ந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். ஆனால் அங்கு திருமாவளவனுக்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவி வந்துள்ளது. இருப்பினும் மக்களை சந்தித்து விட்டு ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசும் பொழுது இந்த விவகாரம் குறித்து நீங்கள் ஆளுங்கட்சியை நோக்கி என்ன கேள்வி எழுப்பி உள்ளீர்கள் என தாறுமாறான கேள்விகளை மக்கள் முன்வைக்க அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுக மீது மக்கள் கொண்டுள்ள கொந்தளிப்புகளை நேருக்கு நேராக கண்ட திருமாவளவன் எதுவும் செய்ய முடியாமல், பேச முடியாமல் தலைகுனிவில் திரும்பி வந்துள்ளார்!