தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் என குறிப்பிட்ட நிலையில் பின்பு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகிதம் அடிப்படையில் பாஜகதான் மூன்றாவது பெரிய கட்சி என நிரூபணம் ஆனது, இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போன காங்கிரஸ் கட்சி சற்று அடக்கி வாசித்தது.
இந்த சூழலில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அழகிரி தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது, ராகுல் காந்தியின் தமிழக வருகையை முன்னிட்டு நடைபெற இருந்த செய்தியாளர் சந்திப்பில் திடீர் என சேர் உடையும் சத்தம் கேட்டது என்ன என பார்த்தால் காங்கிரஸ் கட்சியினரே இரண்டு தரப்பாக கூடி அடித்து கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பின் போதே கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது, இதை பார்த்த பொதுமக்கள் முதலில் காங்கிரஸ் மூன்றாவதா அல்லது நான்காவதா என பேசுவதை விட்டுவிட்டு கட்சியில் உள்ள கோஷ்டிகள் மூன்றா அல்லது நான்கா என கணக்கெடுத்தால் நன்றாக இருக்கும் என கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் வாக்கு அளிக்க ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ சண்டை போட்டு மோதல் உண்டாக்க மட்டும் ஆட்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர்.
இரு தரப்பும் மோதி கொண்ட காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.