தமிழகத்தில் பாஜக நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற எண்ணிக்கை மற்றும் வாங்கிய வாக்கு சதவிகிதம் அக்கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது, தனித்து போட்டியிட்டு 5.4% வாக்குகளை பெற்ற பாஜக 308 கவுன்சிலர்களை பெற்றுள்ளது.
போட்டியிட்ட இடங்களில் சராசரியாக 12 சதவிகித வாக்குகளை பாஜக பெற்று இருப்பது டெல்லி தலைமையை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது, குறிப்பாக தனித்து போட்டி என்ற முடிவை அண்ணாமலை எடுத்தபோது எது போன்ற நிகழ்வை உண்டாக்கும் என கட்சியில் ஒரு தரப்பு அதிருப்தியில் இருந்தது.
ஆனால் இந்த நகர்புற தேர்தல் முடிவுகள் மூலம் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்றால் கொங்கு மண்டலத்தில் அதிமுக வெற்றி பெறுவது என்பது நடக்காத காரியம் என்று உறுதிப்படுத்தியுள்ளது, இவை அனைத்தையும் தாண்டி தலைநகர் சென்னையில் பாஜக 8 % வாக்குகளை பெற்று இருப்பது மிக பெரிய அதிர்ச்சியை திமுகவிற்கும் கொடுத்துள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கி குறைந்தது மாநிலம் முழுவதும் 10% இருக்கும் என்பது தெரியவந்துள்ளது, இந்த செய்தி குறிப்பாக பிரதமரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, ராகுல் காந்தி ஒரு காலத்திலும் உங்களால் தமிழக மக்களை ஆள முடியாது என கூறிய நிலையில் பாஜக "தனித்து" போட்டியிட்டு தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருப்பது பிரதமரை உண்மையில் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இது குறித்து உடனடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரடியாக தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர் மேலும் உடனடியாக நிதி அமைச்சர் "நிர்மலா சீதராமனை" தமிழகத்திற்கு செல்லவும் அறிவுறுத்தி இருக்கிறார் இந்த சூழலில் பிரதமர் மோடி அரசியல் பயணமாக தமிழகம் வர இருப்பதாகவும் குறிப்பாக தமிழ் புத்தாண்டு தினத்தில் கன்னியாகுமரி சென்று விவேகானந்தர் தியான மண்டபத்தில் ஒரு நாள் முழுவதும் தியானம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழ் புத்தாண்டு "சித்திரை மாதம்" என்பதை உறுதி படுத்திய பிரதமர் மேலும் கன்னியாகுமரியில் பாஜகவிற்கு அளித்த வாக்கிற்கு நன்றி செலுத்தும் விதமாகவும் செயல்பட இருக்கிறார் என்று கூறப்படுகிறது இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பிரதமர் திட்டமிட்டு இருப்பதாகவும் அது விரைவில் தமிழகத்தில் அரங்கேற இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் தமிழகம் வருகிறார் என்ற செய்தி பரவும் நிலையில் இப்போதே எதிர்க்கட்சிகள் தங்கள் கதறலை வெளிப்படுத்தி வருகின்றனர், பொங்கல் பண்டிகையின் போது தமிழகம் வரவிருந்த பிரதமரின் வருகை கொரோனா பரவலால் தடை பட்டது குறிப்பிடத்தக்கது.
More Watch Videos