பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் தமிழக அரசிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அதில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி திருமாறன் நிபந்தனை இன்றி விடுதலை செய்யவேண்டும் எனவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார் என்ற வழக்கினை தமிழக அரசும் காவல்துறையும் நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தவறுகள் நடைபெற்று இருந்தால் அதற்கு சட்டம் கடமையை செய்யலாம் அதற்கு தமிழக காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தமிழக பாஜக தயாராக இருப்பதாகவும் ஆனால் வருவாய்த்துறை காவல்துறை இடையே புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி விடுவதாகவும் அடுத்த முறை இது போன்ற எந்த தவறுகளும் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு முயற்சி செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமாறன் கடந்த 31 ம் தேதி அன்று சிறைக்கு செல்வதற்கு முன்னர் தான் பெரியார் சிலைக்கு போட்டியாக, தேவர் சிலை வைக்க திருச்சியில் இடம் பார்த்து கொண்டு இருந்தேன், மேலும் இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன் இவற்றையெல்லாம் மனதில் வைத்து கொண்டுதான் என் மீது தமிழக காவல்துறை மூலம் தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை ஈடுபட்டு இருப்பதாக திருமாறான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமாறன் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் அவர் மீது பதியப்பட்ட வழக்கினை தமிழக அரசாங்கம் திரும்ப பெறவேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்து கொண்டு இருக்கும் சூழலில் தற்போது பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் திருமாறன் உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
தினசேவலுக்கு இதுகுறித்து பேராசிரியர் அளித்த பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது.