தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அரசு முறை பயணமாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் சந்திக்க இருக்கும் செய்தி குறித்தும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களுக்கு ஆளுநர் போட்ட உத்தரவு குறித்தும் TNNEWS24-க்கு கிடைத்த தகவல்களை பார்க்கலாம்.
வருகின்ற 14-ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமிட்ஷா தலைமையில் தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது இதில், தமிழகம், ஆந்திரம், கேரளம், தெலுங்கானம், புதுவை மாநில முதல்வர்கள் மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
முதல்வர்கள் உடன் மத்திய உள்துறை அமைச்சர் ஒருவர் ஆலோசனை நடத்துவது அரசு முறை திட்டங்களின் தொடர்ச்சி என்றாலும், இந்த முறை திருப்பதியில் நடத்தப்படும் மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க படுகிறது அதற்கு முக்கிய காரணம் தென் மாநிலங்களில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகள் நடமாட்டம், இந்தியாவில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களுக்கு நிகராக கேரளா மற்றும் தமிழக ஆகிய மாநிலங்களில் பயங்கரவாத இயக்கங்களின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக தமிழகம் கேரளம் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நாட்டிற்கு எதிரான அசம்பாவித செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாக உளவு துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சென்னையில் தேசிய புலனாய்வு அமைப்பான N.I.A கிளை அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த சில இயக்கங்கள் பெயரை பட்டியல் போட்டு இந்த இயக்கங்களின் தலைவர்கள் அரசியல் ரீதியாக தங்களை வளப்படுத்தி கொள்ள, சட்ட விரோத செயல்களில் ஈடுபாடுகிறார்கள் என்ற முழு தகவலை N I A அமைப்பு திரட்டி உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் தமிழக காவல்துறையினரிடம் அவ்வப்போது தகவல்களை பரிமாறி வந்த சூழலில் சில நேரங்களில் தகவல்களை கடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது, NIA அமைப்பு சோதனை செய்யும் போது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விவாகரங்களில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் அதிகாரிகள் ரிப்போர்ட் செய்துள்ளனர்.
இதை மையமாக கொண்டே திருப்பதியில் தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது, ஒவ்வொரு மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை செயலாளர், டிஜிபி, மாநில உளவு பிரிவு தலைவர் என பலரிடமும் ஆலோசனை நடத்துகிறார் உள்துறை அமைச்சர் அமிட்ஷா, இதில் தமிழகம் சார்பில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை டிஜிபி சைலந்திர பாபு,
உளவு பிரிவு தலைவர் டேவிட்சன் ஆசீர்வாதம் இன்னும் முக்கிய IAS மற்றும் IPS அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த சந்திப்பில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விவாகரத்தை மேற்கொள்வது குறித்தும் அதனை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் மூலம் செயல்படுத்து குறித்தும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
இது ஒரு புறம் என்றால் மற்றொறு பக்கம் ஆளுநர் தனது செயல்பாடுகளை தொடங்கிவிட்டார் கடந்த மாதம் 30 ம் தேதி துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் பல்கலை கழங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார் மேலும் பல்கலை கழங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன என்ற பட்டியலையும் துணை வேந்தர்களுக்கு பாடமாக எடுத்துள்ளார் ஆளுநர்.
மேலும் பல்கலைகழகங்களில் சட்டத்தை பாதிக்கும் வகையிலும், இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படும் நபர்களை அழைத்தோ அல்லது அவற்றை ஊக்குவிக்கும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி கொடுக்க கூடாது எனவும் அவ்வாறு செயல்பட்டால் மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாத போக்கு உண்டாக காரணமாக அமையும் எனவும், ஒருமுறைக்கு 10 முறை கருத்தரங்கு நடத்தும் நோக்கம் குறித்து முழுமையாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளார் ஆளுநர்.
சமீபத்தில் நெல்லை பல்கலை கழகத்தில் இஸ்லாத்தில் பெரியார் என நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு அங்கு சட்ட மோதல்கள் உண்டான நிலையில் கருத்தரங்கின் தொடர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை நெல்லை பல்கலைகழக துணை வேந்தர் ரத்து செய்ததுடன் இனி கருத்தரங்கு நடத்த வேண்டும் என்றால் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நபர்கள் குறித்தும் முழுமையான விளக்கம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் இது போன்ற தொடர் நடவடிக்கை யாரை பாதித்ததோ இல்லையோ திருமுருகன் காந்தி போன்றோரை வலுவாக பாதித்துள்ளது, அதிமுக ஆட்சியில் கூட இவ்வாறு இல்லை திமுக ஆட்சியில் எங்களை கூட்டம் கூட நடத்த காவல்துறை அனுமதிப்பது இல்லை, எங்கள் மீது வழக்குகள் பாய்கின்றன என திருமுருகன் காந்தி சமீபத்தில் தனியார் யூடுப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் அரசு விவாகரங்களில் மூக்கை நுழைக்கவில்லை மாறாக தனது ஆளுமைக்கு உட்பட்ட பல்கலைக்கழங்களில் நடைபெறும் சில தவறான செயல்பாடுகள் மீது உச்சந்தலையில் கை வைத்து ஓங்கி அடித்துள்ளார். நாளை மற்றொறு முக்கிய தகவல்களுடன் சந்திக்கலாம்.