24 special

அண்ணாமலை குறித்து பரவிய செய்தி பதிலடி கொடுத்த பேராசிரியர் !

Rama srinivasan, annamalai
Rama srinivasan, annamalai

சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்ற படுவார் என்ற தகவல் பரவி வந்தது குறிப்பாக திமுகவினர் அதிகம் பயன்படுத்தும் பக்கங்களில் இந்த செய்திகள் மிக வேகமாக வலம் வந்த நிலையில் அதற்கு பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தற்போது சில ஆன்லைன் ஊடகங்களில் ஒரு விஷமச் செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் திரு. அண்ணாமலை அவர்கள் விரைவில் மாற்றப்படுவார் என்றும் புதிய தலைவர் பொறுப்பேற்பார் என்றும் சில விஷமிகள் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.

இது போன்ற செய்திகள் தீய நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் தலைமையில் வீச்சாகவும்! வீரியமாகவும்.விரைவாகவும்..வளர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இது போன்ற சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் மனதில் குழப்பத்தை விளைவிக்கவும் பாரதிய ஜனதா கட்சியை பலவீனப்படுத்துவதற்கான முயற்சி இது... பாஜகவில் காங்கிரஸ் கட்சி போன்று தலைவர்களை நியமிக்கும் வழக்கம் கிடையாது. திமுக போன்று ஒரு குடும்பத்துக்குள் மட்டுமே தலைவரை தேடுகிற தகுதியற்ற கட்சியும் கிடையாது.

அண்ணாமலை அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை குவிக்கும் என்பதில் ஐயமில்லை, அண்ணாமலை அவர்கள் பாஜகவின் தலைவர் மட்டுமல்ல தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர் என்பதை எதிரிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்..வாழ்க பாஜக வெல்க தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.