Cinema

சின்ன பையன் நீ ... ஆமாம் பொய்தான் போட்டு தாக்கிய கஸ்தூரி...!

Actress kasthuri
Actress kasthuri

முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு எச்சரிக்கை கொடுத்து அனுப்பிய கடிதத்தை மையமாக கொண்டு தனியார் ஊடகம் ஒன்றில் விவாதம் நடைபெற்றது, இதில் ஆளும் திமுக சார்பில் சரவணன் கம்யூனிஸ்ட் சார்பில் அருணன், அரசியல் விமர்சகர்களாக கஸ்தூரி மற்றும் BR ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து இருந்தனர் விவாதத்தை ஹரி தொகுத்து வழங்கினார்.


வழக்கமாக கஸ்தூரி பங்கு பெரும் விவாதம் என்றாலே அது நிச்சயம் அதிரடியாகதான் இருக்கும் போதாத குறைக்கு எதிர் தரப்பில் சரவணன் மற்றும் அருணன் ஆகியோர் இணைந்து இருப்பதால் கேள்விகள் அதிரடியாக இருந்தன, கஸ்தூரி தமிழகத்தை இத்தனை நாட்கள் முன்னணி ஊடகங்களை கையில் வைத்து கொண்டு திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வந்தன.

ஆனால் சமூக ஊடக காலம் என்பதால் மக்கள் மத்தியில் உண்மை வெளிவந்து விடுகிறது, முதல்வர் பிரதமருக்கு எழுதும் கடிதத்தை காட்டிலும் இப்போது சொந்த கட்சியினருக்கு அதிகமாக கடிதம் எழுத வேண்டி இருக்கிறது என ஒரே போடக போட்டார். அப்போது இடையில் குறுகிட்ட திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கஸ்தூரியை நடிகை என அழைக்க பளார் பதிலடி கொடுத்தார்.

சரவணன் நீங்களும் நானும் ஒரே கல்லூரியில் சட்டம் படித்தோம் சொல்லுங்கள் நான் உங்களுக்கு ஜூனியரா சீனியரா என கேள்வி கேட்டார் நடிகையாக இங்கு நான் பேசவரவில்லை அரசியல் விமர்சகராக பேச வந்துள்ளேன் என கூற..

உடனே சரவணன் நான் நடிகை என்று எந்த தவறான நோக்கத்திலும் அழைக்கவில்லை என விளக்கம் கொடுக்க உடனே கஸ்தூரி உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களிடம் இதை கூறுங்கள் அவர்கள் நடிகைகள் குறித்து எவ்வாறு பேசுகிறார்கள் என கூறி உடனே சரவணன் என்னை விட வயது குறைவு நான் சின்னபயன் என அழைக்கலாமா என பதிலடி கேள்வி கேட்டார்.

இப்படி பல இடங்களில் கஸ்தூரியிடம் வாங்கி கட்டிய சரவணன் பள்ளி குழந்தைகள் ஆசிரியரிடம் புகார் தெரிவிப்பது போன்று என்ன ஹரி இதெல்லாம் என நெறியாளர் பக்கம் திரும்பியது பார்ப்போரை நகைக்க செய்துள்ளது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.