தமிழக காவல்துறை செயல்பாடு கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ள நிலையில் சட்டத்தை சட்டமாக எதிர்கொள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பச்சை கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பிணையில் வெளிவருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்து மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசும், தமிழக காவல்துறையும் தீவிரம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மத்திய அரசு இந்திய இராணுவம், பிரதமர் மத்திய அமைச்சர்கள் போன்றோரை இழிவாக பேச கூடிய பலரை தமிழக காவல்துறை கைது செய்வது இல்லை எனவும் மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி குற்றவாளிகளை காப்பாற்றி வருவதாகவும் தமிழக பாஜக தலைமை மத்திய அரசிற்கு பல்வேறு ஆதாரங்களை சுட்டிக்காட்டி புகார் அனுப்பியுள்ளது.
மேலும் தமிழகத்தில் தேசியவாதிகளுக்கு ஆதரவாக பேசும் நபர்களை திட்டமிட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நிலை உருவாகி இருப்பதாகவும் இதே நிலை நீடித்தால் முந்தைய காஷ்மீர் பீஹார், மேற்குவங்கம் நிலை தமிழகத்தில் உண்டாகலாம் எனவும், முழுக்க முழுக்க தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி கையில் இருந்து மீறி ஆளும் கட்சியினர் கைகளுக்கு சென்றுள்ளதாக பல்வேறு புகார்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சென்றுள்ளன.
இது குறித்து மத்திய உள்துறை செயலகம் தமிழக தலைமை செயலகத்தை சேர்ந்த நபர்களை தொடர்பு கொண்டதில் சட்ட ரீதியாகவே தமிழகத்தில் காவல்துறை செயல்படுவதாகவும், தமிழக காவல்துறை எந்த வித அரசியல் செயல்பாட்டிற்கும் உள்ளாகவில்லை என சட்ட ரீதியாக விளக்கம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலிழ்தான் அதே சட்ட ரீதியாக ஆடு புலி ஆட்டத்தை தொடங்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது குறிப்பாக பாஜக ஆட்சி நடக்கும் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி கர்நாடக மாநிலங்களில் இனி சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்படலாம் எனவும், அதன் எதிரொலியாக பலரை கைது செய்ய எல்லை தாண்டி தமிழகத்தில் இரு மாநில காவல்துறையும் நுழையலாம் என கூறப்படுகிறது.
அவ்வாறு தமிழக எல்லையில் இரு மாநில போலீசார் நுழையும் போது தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தால் அதை சட்ட ரீதியாக அணுகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் முக்கிய. தகவல்கள் கிடைத்துள்ளன, தொடர்ச்சியாக ஒரு தலை பட்சமாக மட்டுமே தமிழகத்தில் காவல்துறை செயல்பட்டு வருவது ஆளும் கட்சிக்கு ஆதரவாக தமிழக காவல்துறை செயல்படுகிறதா என்ற வாதத்தை அதிக படுத்தியுள்ள சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் வழக்கு தமிழகத்தில் மட்டுமல்ல வேறு மாநிலத்திலும் பதியலாம் என சூசகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.