எழுத்தாளர் மாரிதாஸ் சமூக வலைத்தளம் மூலம் பல்வேறு வகையான சமுதாய பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு வருபவர் இந்த சூழலில் நேற்று முன்தினம் மாரிதாஸ் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் மதுரை கே புதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி தேனி சப் ஜெயிலில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை,தொடக்கத்தில் பிணையில் வரக்கூடிய சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர் பின்பு பிணையில் வெளிவர முடியாத வகையில் இந்திய தண்டனை சட்டம் 124 ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக மாஜிஸ்டரேட் முன்பு தெரிவிக்க மாரிதாஸ் சார்பில் ஆதரவான வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சூழலில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் இருவர் ஒன்றாக இணைந்து பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர், சமீபத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய திரைப்படத்தை மாரிதாஸ் கடுமையாக விமர்சனம் செய்தார், மேலும் படத்தின் இயக்குனர் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு பதில் கொடுத்து அந்த சர்ச்சை படத்தின் இயக்குனரும் ட்விட்டரில் பதிவு அளித்து இருந்தார், மேலும் கடும் எதிர்ப்பு காரணமாக தனது தவறை ஒத்துக்கொள்ளும் சூழலுக்கு சென்று இருந்தார் இயக்குனர். இவர் மாரிதாஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தலை சீவும் பொருள் ஒன்றை அடையாளமாக கொண்ட பத்திரிகையாளர் பல நாட்களாக மாரிதாஸ் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்து வந்துள்ளார், திமுக ஆட்சி அமைந்த நாளில் இருந்து தனக்கு தெரிந்த திமுக முக்கிய புள்ளிகள் இடத்தில் எப்படியாவது மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம்பி வந்துள்ளார். மேலும் கைது செய்யும் வரை அவரது பெயரை கூட உச்சரிக்க மாட்டேன் எனவும் கைது செய்யும் நாள் அன்று எனது கருத்தை தெரிவிப்பேன் எனவும் சபதமாக பலரிடம் தெரிவித்து வந்து இருக்கிறார் அந்த தலை சீவும் பொருள் ஒன்றை அடையாளமாக கொண்ட பத்திரிகையாளர்.
இந்த சூழலில்தான் மாரிதாஸ் கைது செய்யபட்ட சூழலில் தனக்கு நெருக்கமான பலருக்கு போன் செய்து நாம சாதிச்சுட்டோம் மாறா என்ற சினிமா பட பாணியில் துள்ளி குதித்து ஆனந்ததை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சர்ச்சை இயக்குனர் மற்றும் தலை சீவும் பொருளை அடையாளமாக கொண்ட பத்திரிகையாளர் இன்னும் சிலர் இணைந்து மாரிதாஸ் கைதை பார்ட்டி வைத்து கொண்டாடவும் செய்துள்ளனர் என்கின்றன ஊடக வட்டாரங்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஆளும் கட்சியால் அடக்குமுறைக்கு உள்ளாக்கபட்டு கைது செய்யப்பட்ட பிரபலங்கள் பின்னாளில் சமூக வலைத்தளங்களை தவிர்த்து அரசியலிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர் என்பதே வரலாறு, அந்த வகையில் மாரிதாசும் விரைவில் பாஜகவில் இணையலாம் என்றும் அவரும் அரசியலில் தடம் பதிக்க இந்த கைது சம்பவங்கள் துணை நிற்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.