Tamilnadu

பஞ்சாப் குளறுபடி வருகிறது புதிய சட்ட திருத்தம் அமிட்ஷா அதிரடி! வச்சாங்க பார் ஆப்பு!

Amitshah
Amitshah

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பயணித்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவை கொடுத்துள்ளது பிரதமர் வாகனம் செல்ல கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக பஞ்சாப் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. மேலும் பிரதமரை கொலை செய்ய நடத்தப்பட்ட சதி செயலாக இருக்கலாம் என்ற ரீதியில் பல்வேறு வழிகளில் விசாரணை நடத்தி வருகிறது உளவு அமைப்புகள்.


இது ஒரு புறம் என்றால் பிரதமர் பாதுகாப்பு விஷயத்தில் மாநில தலைமை செயலாளர் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகியோர் முறையாக செயல்படாத காரணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருவரும் இருப்பதால் பிரதமர் விவகாரத்தில் மாநில அரசு என்ன சொன்னதோ அதையே இருவரும் செய்து இருக்கிறார்கள் சட்டத்தை பற்றியெல்லாம் கவலை இல்லை அவர்களுக்கு தங்கள் பதவிதான் முக்கியம் என்பதால் பிரதமர் பாதுகாப்பு விஷயத்தில் வேண்டும் என்றே அலட்சியமாக நடந்து கொண்டார்கள் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தினர்.

மேலும் இந்த விவகாரத்தை இப்படியே விட்டால் நாளை மற்ற மாநிலங்களிலும் இதே நிலை உண்டாகும் அனைத்திலும் அரசியல் என்றால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும் என்று பலரும் வேதனை தெரிவித்த சூழலில் சிறப்பு சட்ட திருத்தம் கொண்டுவர உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது அதன் படி :-

காங்கிரஸ் ஆட்சியில் 1985ல் இந்த எஸ்.பி.ஜி., தொடர்பாக சட்டம் உருவாக்கப்பட்டது.பிரதமரின் பாதுகாப்பில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதற்கு இந்த சட்டத்தில் சரியான விளக்கம் இல்லை. காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின் இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் இதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

பஞ்சாப் குளறுபடிக்குப் பின் இந்த சட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்ய அமித் ஷா முடிவெடுத்துள்ளார்.சட்டத்தில் திருத்தம்'பிரதமர் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி., தான் அவரது பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும்.'ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் பதவி பறிபோவதுடன் சிறைக்கும் செல்ல வேண்டியிருக்கும்' என, இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய, உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இனி பிரதமர் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்தால் தலைமை செயலாளர் டிஜிபி இருவர் பதவியும் பறி போகும் என்பதுடன் சிறை செல்லும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருப்பதால் இனி இது போன்ற அரசியல் அசம்பாவிதம் எந்த மாநிலத்திலும் நிகழாது என்கின்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.