ஏழைகளுக்கான 10.5% இட ஒதுக்கீடு இந்திய அளவில் பலரும் வரவேற்று வருகின்றனர், இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என பல கட்சிகள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர், ஆனால் தமிழகத்தில் அது குறித்து பல கட்சிகள் மக்களை திசை திருப்பி வருவதாக பல நாட்களாக குற்றசாட்டு எழுந்து வருகிறது குறிப்பாக இந்த இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு என்று விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது.
ஆனால் இது குறித்து எந்தெந்த சாதிகள் பயன் பெறுகின்றன என்று பட்டியலே போட்டுள்ளார் ஆசிரியர் பெரியசாமி தங்கவேலு, இது குறித்து அவர் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு : 10% பொருளாதார இடஒதுக்கீடு பிராமணர்களுக்கு மட்டும்தான் என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்தப் பதிவில் பின் குறிப்பில் கொடுக்கப்பட்ட அனைத்து சாதிகளும் முற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளனர். கிருத்துவர்களும் முஸ்லிகளும் கூட இந்த பட்டியலில் உள்ளனர் .
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினர் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் இங்கே விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். சென்ற வருடம் (2021) தமிழ்நாட்டில் நடந்த MBBS மருத்துவ மாணவர் சேர்க்கையில் மொத்தமுள்ள 3650 இடங்களில் முற்பட்ட சாதியினர் என சொல்லப்படும் உயர் சாதியினருக்கும் கிடைத்த இடங்கள் வெறும் 107 மட்டுமே. இது வெறும் 2.9 சதவீதம் மட்டுமே. ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் உயர்சாதியினர் 13 சதவீதம் உள்ளனர்( Information from Google).
பொதுப் பிரிவிற்கு என்று ஒதுக்கப்பட்ட 1131 இடங்களில் வெறும் 107 இடங்கள் மட்டுமே உயர்சாதி என்று சொல்லப்படும் மக்களுக்கு கிடைத்தது. மீதமுள்ள இடங்களை பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுப்பிரிவில் பொதுப் போட்டியில் எடுத்துக் கொண்டார்கள். தரமான கல்வி மற்றும் வசதி வாய்ப்புகள் இல்லாததால் உயர்சாதி என்று சொல்லப்படும் மக்களால் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள மிகப் பலரிடம் பொதுப் போட்டியில் போட்டி போடவே முடியாத நிலை உள்ளது இதன்மூலம் தெளிவாகப் புலனாகிறது அல்லவா???
இந்த தரவுகளை பார்க்கும்பொழுது கீழ்க்கண்ட உண்மைகள் புலனாகின்றது
1. உயர்சாதியினர் என்று வகைப் படுத்தப்பட்ட பெரும்பாலானோர் பெயரளவில்தான் உயர் சாதியினராக உள்ளார்கள். அவர்களின் பொருளாதாரம், கல்வி, சமூக நிலைமை கீழ் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. 2. உயர் சாதியினரை விட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களில் மிகப் பலர் கல்வி பொருளாதாரம் வசதி வாய்ப்புகளில் மிகவும் முன்னேற்றமான நிலையில் உள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தார் என்பதற்காக எவ்வளவு ஏழையாக இருந்தாலும் அவருக்கு எந்த சலுகையும் கொடுக்கக் கூடாது என்பது நியாயமல்ல. அதே போல் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த என்பதற்காக எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் அவருக்கு சலுகை கொடுக்க வேண்டும் என்பது நியாயமல்ல.
நியாயங்களும் சமூக நீதிகளும் ஓட்டு சதவிகிதத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்கப்படும் என்றால் அதற்குப் பெயர் சமூக நீதி அல்ல அதற்கு பெயர் சமூக அநீதி.இந்த குரலற்றவர்களின் குரல் ஏதோ ஒரு வகையில் எங்கோ எதிரொலிக்கபட்டு இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இந்த ஒதுக்கீடு உண்மையில் அந்தக் குரல் அற்றவர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறு நீதியாக பார்க்கப்படுகிறது.
வரலாற்றுசிறப்புமிக்க இந்த 10% இடஒதுக்கீட்டை வரவேற்போம். அனைத்தையும் அவர்கள் கேட்கவில்லை. ஒரு 10% மட்டும் தானே கேட்கிறார்கள். கொடுத்து விட்டுப் போவோமே! அவர்களும் வாழட்டுமே! அனைவரும் நம் சகோதரர்கள் தானே?? நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் இதில் உள்ள நியாயத்தை பார்த்து இந்த பதிவை எழுதுகிறேன். உங்களுக்கும் நியாயம் என்று பட்டால் தயவு செய்து இதைப் பகிருங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
பின்குறிப்பு: கீழ்கண்ட அனைத்துசாதியிலும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறுவார்கள்.1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலோ இந்தியர் (511), ஜனோலா சால்வேஷன் சர்ச் (512), லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513), மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514), ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515), முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516),தாவூத் (608), கட்ஸு (சைத்)(609), மீர் (610), மைமன் (சைத்) (611), நவாப் (612), (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613), 501 செட்டியார் (701), அச்சு வெள்ளாளர் (702), ஆதி சைவர் (703),ஆற்காடு முதலியார் (704), ஆரியர் (705), அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706), ஆற்காட்டு வெள்ளாளர் (707), அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708), ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709), பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710), பேரி செட்டியார் (711), போகநாட்டு ரெட்டியார் (712), பிராமணர் (713), சோழபுரம் செட்டியார் (714), தேவதிகர் (715), எழுத்தச்சர் (716), ஞானியர் (717), ஜைனர் (718), கடையத்தார் (719), கதுப்பத்தான் (720), காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721), கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722), கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723), காசுக்கார ஆச்சாரி (724), காயல் செட்டி (725), கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726), கொண்டியர் (727), கொங்குச் செட்டியார் (728), கொங்கு நாயக்கர் (729), கொங்கு ரெட்டியார் (730), கொந்தல வெள்ளாளர் (731), கொட்டைக்கட்டி வீர சைவம் (732), கோட்டைப்புரச் செட்டியார் (733), கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734), குக வாணியர் (735), மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736), மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737), மொட்டை வெள்ளாளர் (738), மூசிக பலிஜகுலம் (739), நாடன் (நாட்டார்) (740), நாயர் (மேனன், நம்பியார்) (741),நாங்குடி வெள்ளாளர் (742),நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743), ஒருகுண்ட ரெட்டி (744), இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745), பணிக்கர் (746), பத்தான் (பட்டானி), கான் (747), ராஜபீரி (748), ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749), ராவுத்த நாயுடு (750), சைவச் செட்டியார் (751), சைவ ஓதுவார் (752), சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753), சைவ சிவாச்சாரியார் (754), சைவ வெள்ளாளர் (755), சானியர் (756), க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757), திருவெள்ளறைச் செட்டியார் (758), திய்யர் (759), தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760), உலகமாபுரம் செட்டியார் (761), வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762), வெள்ளாளப் பிள்ளைமார் (763), வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764), வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765), வாரியர் (மலையாளம்) (766).
சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999) இதில் உள்ள சாதியினருக்கு பொறுளாதாரத்தில் பின் தங்கியவர்கலுக்கு மட்டுமே இடஒதுக்கீடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து ஒரு சாதிக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற பொய் பிம்பத்தை உடைத்து பொய் செய்தி பரப்பியவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளார் ஆசிரியர்.