உத்திர பிரதேச மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன, சமாஜ்வாதி கட்சி தேர்தல் முடிவுகள் வரட்டும் என அறிவித்து இருக்கிறது, இந்த சூழலில் உபியில் வீதி வீதியாக ரோட் ஷோ செய்து தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரியங்கா செய்த பிரச்சாரங்கள் அனைத்தும் படு தோல்வியை கொடுத்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்திலும் காங்கிரஸ் உபியில் 10 இடங்களை கூட பெறாது என்று கூறியுள்ளன இதன் மூலம் ப்ரியங்கா செய்த ரோட் ஷோ அனைத்தும் வீணாகி இருக்கிறது. இது குறித்து உஷா சங்கர் என்பவர் முகநூலில் பகிர்ந்த தகவல் பின்வருமாறு :-
விஸ்வரூபம் எடுத்த பிரியங்கா வதேரா...உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரியங்கா வதேரா விஸ்வரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் பெண் வாக்காளர்களை தன்னிடம் ஈர்க்கும் வகையில் 40% சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார்.
இளைஞர்களின் வாக்குகளைப் பெற பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார், உபி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ரோட் ஷோ என்று பிரசாரம் செய்தார். கட்டாயம் மறந்து விடக்கூடாது என்பதற்காக கங்கா ஸ்நானம் செய்துவிட்டு பூஜைகள் செய்து பிரசாரக் கூட்டத்தில் சமஸ்கிருத மந்திரம் முழங்கி இந்துக்களின் ஆதரவை பெற்று விட முயற்சி செய்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...நிருபர்கள், நீங்கள் தான் முதல்வர் வேட்பாளரா என்று கேள்வி கேட்க....என்னைத் தவிர உங்கள் கண்களுக்கு வேறு யாராவது முதல்வர் வேட்பாளராக தெரிகிறார்களா என்று கேட்டு தானே முதல்வராவதாக சூசகமாக அறிவித்தார் பிரியங்கா வதேரா.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து கணிப்புகளும் பிரியங்கா வதேராவை புஸ்வானமாக கணித்துள்ளது,உபியில் காங்கிரஸ் பெறும் இடங்கள் India Today - Axis My India....... 1-3 இடங்கள்... C-Voter கணிப்பு 2-6 இடங்கள்.... Jan Ki Baat 3-4 இடங்கள்..... Chanakya 1 இடம்.... Times Now 9 இடங்கள்....
உத்தரபிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்த பிரியங்கா வதேரா காங்கிரஸ் பிரசாரம் படு தோல்வியை சந்திக்கிறது,ராகுல் காந்தியின் விஸ்வரூபம், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி சித்துவுக்காக, ராகுல் காந்தி ஆணவணப் போக்கால் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார்.
கருத்துக் கணிப்பில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து படு தோல்வி அடைய ராகுல் காந்தியே காரணமாகிறார், தேர்தல் நடந்த 5 மாநிலத்தில் ஒரே ஒரு ஒற்றை மாநில பஞ்சாப்பில் ஆட்சியை இழக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
More Watch Videos