Tamilnadu

முதல்வர் ஸ்டாலினை நோக்கி டீ டம்ளரை வீசிய மாஸ்டர்.. காசு கொடுக்காமல் சென்றதால் எறிந்தாரா ? உண்மை என்ன?

stallin
stallin

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு திட்டங்களை செயல்படுத்த தூத்துக்குடி சென்ற நிலையில் அவரது பயணம் பல்வேறு சச்சரவுகளை உண்டாக்கியுள்ளது பெட்ரோல் ஊற்றி ஒருவர் போராட்டம் நடத்தியது, டீ கடை மாஸ்டர் டம்ளரை கொண்டு எறிந்தது என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.


இது குறித்து பார்க்கலாம் துாத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார் முதல்வர். துாத்துக்குடி அருகே மேலசெக்காரக்குடி கட்டட தொழிலாளி சுடலைமணி முதல்வர் கார் சிதம்பர நகர் மெயின் ரோடு அருகே சென்ற போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனே அப்புறப்படுத்தினர். குடும்பச் சொத்தை உறவினர்கள் அபகரித்துக் கொண்டு தம் மீது பொய் வழக்கில் சிறையில் அடைத்ததாகவும் காவல்துறையினர் மீதும் பல்வேறு புகார்களை அவர் தெரிவித்தார்.

பின் கன்னியாகுமரி செல்லும் வழியில் மாவட்ட எல்லையான காவல்கிணறு அருகே சென்ற போது ஒரு டீக்கடையில் டீ மாஸ்டர் பாஸ்கர் 60, ஒரு சில்வர் டம்ளரை எடுத்துக்கொண்டார். பெண்கள் கூட்டமாக நின்ற இடத்தில் நின்று கொண்டு முதல்வரின் கார் வந்தபோது டம்ளரை வேகமாக வீசினார். இருப்பினும் டம்ளர் முதல்வரின் கார் கடந்த பிறகு, 10 வது வாகனத்தின் முன் ரோட்டில் விழுந்தது.

டீக்கடை ஊழியர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார் இந்த காட்சியை பார்த்த பலர் திமுகவினர் காபி குடித்துவிட்டு காசு கொடுக்காமல் சென்றதால் டி மாஸ்டர் கோவத்தில் அவ்வாறு செய்து இருக்கலாம் என  வைரலான நிலையில் டீ கடை தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் டம்ளரை கொண்டு எறிந்தது தெரியவந்துள்ளது.

முதல்வரை நோக்கி டம்ளரை எறிந்தது டீ கடை தொழிலாளி மீது பெண் வன்கொடுமை உட்பட 5 பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பிரதமர் மோதி தமிழகம் வரும் போது சிலர் பதாகைகளை வீசி எறிந்ததை முக்கிய செய்தியாக தமிழக ஊடகங்கள் ஒளிபரப்பிய நிலையில் முதல்வரை நோக்கி டம்ளரை எறிந்த சம்பவம் குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More Watch videos