தமிழக மின்சாரவாரியம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் 4 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஆளும் கட்சி பிரமுகர் மற்றும் அமைச்சர் ஆகியோர் தனியார் நிறுவனத்திடம் பேரம் பேசி வருவதாகவும் அதனை நிறுத்தவில்லை என்றால் ஆதாரத்தை வெளியிடுவோம் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இது கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் இதனை மெய்ப்பிக்கும் வகையில் மின் ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டம் கடும் அதிர்ச்சியை ஆளும் கட்சிக்கு கொடுத்துள்ளது, தமிழக மின்துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் எப்படி 100 யூனிட் மின்சாரம் கொடுக்கிறார்கள் அதற்கு பணத்தை அரசாங்கம் மின்துறைக்கு கொடுப்பது இல்லை இப்போது ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க போகிறோம் என்கிறீர்கள்.,
இதற்கு யார் பணம் கணக்கில் வரப்போகிறது, விவசாயிகளுக்கு இலவச மின்சார கொடுப்பது நல்லது வரவேற்கிறோம் அதற்கான பணத்தை அரசாங்கம் மின்சாரத்துறைக்கு எப்போது செலுத்த போகிறது, மின்துறைக்கு கடன் கடன் என்றால் உங்களால் தான் வருகிறது, நீங்கள் ஓட்டு வாங்க நாங்கதான் கிடைத்தோமா மின் துறையவே குழி தோண்டி புதைத்து விட்டீர்கள் என பேசினார்.
சில கம்பெனிகளை உள்ளே கொண்டுவர இந்த வேலையை செய்கிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அவர். அண்ணாமலையும் இதே குற்றசாட்டை முன்வைத்தார் தாங்கள் பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 4 மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் போட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
அவரது வாதத்தை வலு சேர்க்கும் விதமாக மின்சாரத்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர் வேதனையுடன் பேசிய காட்சிகளை குறிப்பிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளிக்கவேண்டும் எனவும், இலவச மின்சாரம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க இருப்பதாக வெளியான குற்றசாட்டு ஆகியவற்றிற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுந்துள்ளது. மின்சாரம் கொள்முதல் விவகாரத்தில் புதிய தலைவலி அரசிற்கு உண்டாகி உள்ளது.வீடியோவை பார்க்க கிளிக்.