Tamilnadu

கார்த்திகை செல்வனிடம் ஸ்ரீராம் சேஷாத்திரி கேட்ட 'இரண்டே கேள்வி' பதில் சொல்லுங்க கார்த்தி!

sriram seshatri
sriram seshatri

தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஹிந்தி தேசிய மொழி என கூறிவிட்டார் எனவும் தமிழ் மொழி தெரியாது என கூறிய சம்பவத்தை முன்னிட்டு முன்னணி தொலைக்காட்சிகள் பலவும் பிரைம் நேரத்தில் விவாதத்தை நடத்தின. பல அரசியல் வாதிகள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.


இந்த சூழலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இது குறித்து விவாதம் நடைபெற்றது அப்போது விவாதத்தில் அரசியல் விமர்சகரும், பொருளாதார நிபுணருமான 'ஸ்ரீராம் சேஷாத்திரி'  கலந்து கொண்டார், அப்போது அவஐக்கு வழங்கப்பட்ட குறுகிய நேரத்தில் தனது கருத்தை பதிவு செய்தார், தமிழகத்தில் இரண்டு மக்களவை உறுப்பினர்கள் காணாமல் போனார்கள் (தலைமறைவு ),  ஒருவர் சரண்டர் ஆனார்.

மற்ற ஒருவர் என்ன ஆனார் என தெரியவில்லை அது குறித்து விவாதம் நடத்தவில்லை, பாஜக தலைவர் "அண்ணாமலை" மின்துறையில் நடந்த ஊழல் குறித்து தகவல் தெரிவித்தார் அதுகுறித்தும் விவாதம் நடத்தவில்லை, ஆனால் ஏதோ ஒரு தனியார் நிறுவனம் ஊழியர் சொல்லிவிட்டார் என விவாதம் நடத்துகிறோம் என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி தான் பொது தளங்களில் பலரும் முன்வைத்த வாதம்.

அதை பொதுவானவர்கள் பார்வையில் அப்படியே கேள்வியாக கார்த்திகை செல்வனை நோக்கி மட்டுமல்ல ஓட்டு மொத்த தமிழக மக்களையும் நோக்கி எழுப்பி இருக்கிறார், ஒரு பக்கம் தவறு நடந்தால் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும், மறு பக்கம் யாரோ ஒருவர் செய்த தவறுக்கு பாஜகவை உள்ளே இழுத்துவிட்டு நியாயம் கேட்பது எந்த வகையில் நியாயம் பதில் சொல்லுங்கள் கார்த்திகை செல்வா என பலரும் கேட்கின்றனர்.

சமீப காலமாக ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நெறியாளர்கள் பலர் பதில் சொல்லமுடியாத நிலையே காணப்படுகிறது . இந்நிலையில் ராமா.ரவிக்குமார் தனியார் நிறுவனம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அதில் ஸேமேட்டோ கம்பெனில வேலை பார்கிற ஒரு ஊழியர் இந்தி தேசிய மொழிகற்றுகொள்ளுங்கள் என்று சொல்லும் போது வருகிற கோபம். தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன ஈவேராவுக்கு சிலை எழுப்ப நினைக்கும் போது,கம்பர் வள்ளுவர் கண்ணகி ராஜராஜ சோழன் குறித்து எல்லாம் இவர்கள் விமர்சனம் செய்த போது ஏன் வரவில்லை? என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

திமுக அரசுக்கு தமிழ் மீது உண்மையானபற்று இருக்குமேயானால் சமத்துவபுரங்களில் இருக்கும் ஈவேரா சிலைகளை எடுத்துவிட்டு வள்ளுவர் சிலைகள் வைக்கலாமே!!திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் திருவள்ளுவருக்கு ஏன் சிலை வைக்கவில்லை?திராவிடர் கழக அலுவலகத்தில்  கல்வி நிறுவனங்களில் தமிழ் தாய்க்கும் திருவள்ளுவருக்கும் ஏன் சிலை வைக்கவில்லை என தனது கேள்வியை முன்வைத்துள்ளார் . ஸ்ரீராம் சேஷாத்திரி கேள்வி எழுப்பிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்