24 special

பத்திரிகையாளர் மணி போட்ட போடு.... அலறும் அறிவாலயம்...!

mani , stalin
mani , stalin

'திராவிடம், ஒன்றியம் என பேசிக்கொண்டு தேசிய அரசியலுக்கு போகும் திமுக விரட்டி அடிக்கப்படும்' என அரசியல் விமர்சகர் ஒருவர் முதல்வர் ஸ்டாலினின் தேசிய அரசியல் பற்றி விமர்சித்துள்ளார்.


தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக அரசிற்கு குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு தேசிய அரசியலின் மீது ஆசை வந்துள்ளது. திமுகவில் இருப்பவர்களும், திமுக கூட்டணி கட்சியை சேர்ந்தவங்களும் முதல்வர் ஸ்டாலினிடம் உங்களால் முடியும்! நீங்கள் தான் தேசிய அரசியலுக்கு தகுதி வாய்ந்தவர்! நீங்கள் அடுத்த பிரதமரை நிர்ணயிக்கக் கூடிய ஆள், உங்களுக்கு சக்தி இருக்கிறது!என பேசிய முதல்வர் ஸ்டாலினை உசுப்பேற்றி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 'நமது நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமது அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். இந்த போராட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து அனைத்து ஆதரவையும் தருவார் என்பதை உறுதியாக கூறுகிறேன்' என்றார்.

அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'நாட்டில் ஜனநாயகத்தை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது. இந்திய தலைவர்கள் ஒருநாள் கோபாலபுரம் வீட்டிற்கு வந்து இந்தியாவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கேட்கும் காலம் வரும்' என வழக்கத்தை விட அதிகமாக துரைமுருகன் புகழ்ந்து பேசினார்.

'பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத சமயத்தில் வாலாட்டும் பாஜக இன்றைக்கு மு.க.ஸ்டாலினை பார்த்து அஞ்சி நடுங்குகிறது. இந்தியாவில் தலைமையும் தத்துவமும் ஒருங்கே அமைந்த இயக்கம் என்றால், அது திமுகதான்' என வழக்கம்போல் ஆ.ராசா புகழ்ந்து பேசினார்.

மேலும் மற்றொரு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்திபாலாஜி பேசுகையில், 'இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும்' என பரம்பரை திமுக விசுவாசியையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு பேசினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இப்படி தொடர்ச்சியாக நீங்கள் தான் தேசிய அரசியல், தேசிய அரசியலே உங்கள் காலடியில் என்கின்ற ரீதியில் முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருவதால் அடுத்தபடியாக தேசிய அரசியலுக்கு தயாராகிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் மணி தனியார் யூ ட்யூப் சேனல் நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது, 'முதலில் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் வேண்டுமானால் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக கூட வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பிரதமர் வேட்பாளர் என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத காரியம். மம்தா பேனர்ஜி செய்யவில்லை, இரண்டு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கூட யோசிக்கிறார்! ஆனால் தமிழ்நாட்டைத் தாண்டாத நீங்கள் தேசிய அரசியலுக்கு எப்படி யோசிக்க முடியும்? ஒன்றியம், திராவிடம் எல்லாம் பேசுவது தமிழ்நாட்டிற்குள்ளே வேலைக்காகும். 

ஆனால் கும்மிடிப்பூண்டி தாண்டி இந்த ஒன்றியம், திராவிடம் எல்லாம் பேசினால் வேலைக்காகாது! அடி பெரிதாக விழும் மேலும் நீங்கள் இப்படி தேசிய ஆசையில் இருப்பதனால் விழப்போவது என்னவோ நீங்கள் தான், அது பாஜகவிற்கு தான் சாதகமாக முடியும் எனவே புரிந்து கொள்ளுங்கள் இதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது' என காட்டமாக கூறியுள்ளார். 

திமுக ஆதரவாளரான பத்திரிகையாளர் மணி இப்படி கூறியது திமுகவினரையே 'அப்போ நம்ம தேசிய அரசியல் ஆசையெல்லாம் பொய்யா கோப்பால்' என வருத்தப்பட வைத்துள்ளது.