ரஷ்யாவை குறிவைத்த அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு தனது ஒரே அறிவிப்பின் மூலம் ஆப்பு வைத்துள்ளார் புடின் இது குறித்து நியாண்டர் செல்வன் என்பவர் தெரிவித்த தகவலை பார்க்கலாம்
அழிந்தது ரூபிள் என கூத்தாடிய நேட்டோவுக்கு பெரிய ஆப்பாக இன்று சொருகினார் புடின்."பகைநாடுகளுக்கு (ஐரோப்பா) எரிவாயுவையும், பெட்ரோலையும் ரூபிளில் தான் விற்போம்" என இன்று அறிவித்தார். அறிவித்த சில மணிநேரங்களில் டாலருக்கு 120 எனும் விகிதத்தில் இருந்த ரூபிளின் மதிப்பு 95 ஆக உயர்ந்துவிட்டது.
ஆப்பை சொருகியது மட்டுமின்றி அதன்மேல் மிளகாயும் தேய்த்த கதையாக உடனே ப்ரிட்டனின் எரிவாயுவின் மொத்த விலை ஒரே நாளில் 18% உயர்ந்தது.தன் அடுத்த குறியை அமெரிக்கா மேல் திருப்பியுள்ளார் புடின். சில மாதங்களுக்கு முன்பு பைடன் தாத்தா சும்மா இருக்காமல் புடினை சந்தித்தபோது "நீங்கள் அமெரிக்கா மேல் என்னதான் சைபர் அட்டாக் நடவடிக்கை எடுத்தாலும் இந்த 16 இலக்குகளை ஹேக் பண்ணகூடாது" என ஒரு பட்டியலை கொடுத்து விட்டு வந்தார். தன் எதிரியிடம் "இங்கே மட்டும் என்னை அடிக்ககூடாது.
எனக்கு ரொம்ப வலிக்கும்" என சொல்லும் வகையிலான வடிவேலு காமடி இது. இனி அந்த 16 இலக்குகளையும் ரஷ்ய ஹாக்கர்களிடம் இருந்து ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.2021ம் நவம்பரில் ஏசாட் எனும் ஒரு விண்வெளி ஆயுதத்தை கையில் எடுத்தார் புடின். விண்வெளியில் உள்ள ஒரு ரஷ்ய செயற்கைகோளை குறிவைத்து தகர்த்து காட்டினார். உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை எழுப்பிய அந்த நிகழ்வை இப்போது அமெரிக்க உளவுத்துறை நினைத்து பீதியில் நடுங்கிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்க சாட்டிலைக்களை புடின் தாக்க கூட வேண்டாம்..
ஹேக் செய்தாலே போதும். ஒட்டுமொத்த அமெரிக்காவும் 19ம் நூற்றாண்டுக்கு போய்விடும். ஆயிரம் அணுகுண்டுகளை வீசுவதுக்கு சமமான அடியாக அது இருக்கும். ரஷ்யா போரில் தோற்கிறது என அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து சொல்லி வந்தாலும் நிலைமை வேறு. ரஷ்யர்களின் போர்முறை உலகம் அறிந்த ஒன்று. இரண்டாம் உலகபோரில் ஸ்டாலின்கிராட் போர் சமயம் அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை விட வீரர்கள் எண்ணிக்கை அதிகம். அத்தனை கடும் ஆயுத பற்றாகுறையிலும் ஆயுதமே இல்லாமல் வீரர்களை போருக்கு அனுப்பினார்கள்.
ஏனெனில் கடுமையான உய்ரீழப்புகள் இருந்த போரில் துப்பாக்கிய ஏந்திய வீரன் ஒருவன் விழுந்தால் அவனது துப்பாக்கியை நீ ஏந்தி போரிடு என சொல்லி அனுப்பினார்கள். இப்படி ஜெர்மனி ரஷ்யர்களை சுட்டு கொல்ல, கொல்ல தொடர்ந்து ரஷ்யர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
சிரியாவில் அசாத் அரசு வீழும் என அனைவரும் கணித்த நிலையில் ஐசிஸ், அமெரிக்க ஆதரவு சிரிய விடுதலைபடையிம் இருந்து அசாத்தை காப்பாற்றியது புடின் தான். ஐசிஸ் ஆதரவு கிராமங்கள், நகரங்களை ஒட்டுமொத்தமாக தரைமட்டம் ஆக்கினார். ஆலெப்போ நகரில் நடந்த போரில் ஒரே மாதத்தில் சுமார் ஐநூறு கிலோ வெடிமருந்து கொண்ட ஆயிரம் குண்டுகளை அலெப்போ நகரெங்கும் வீசி தரைமட்டம் ஆக்கியது ரஷ்யா.
ஆக நகர்ப்புற போர் நடந்தால் ரஷ்யா இதை செய்யும் என நேட்டொ நாடுகளுக்கும், உக்ரைனுக்கும் நன்றாக தெரியும். தூர இருந்து குண்டுவீசி மரியபோல், கீவ், கார்கிவ் நக்ரங்களை முற்றிலுமாக அழித்து பிடிக்கவிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் அதிபர் போலந்தில் பதுங்கியிருந்தபடி வாய்சவ்டால் விட்டு மக்களை காவுகொடுத்து வருகிறார். அவருக்கு எந்த பிரச்சனையும், கிடையாது. ரஷ்யா பிடித்தது போக மிச்சமிருக்கும் கால்வாசி நாட்டை வைத்துக்கொண்டு அமெரிக்க அரசின் நிதியுதவியை பெற்றுக்கொண்டு மீண்டும் அதிபர் ஆகிவிடுவார்.
பின்லாந்து நெட்டோவில் சேர்வேன் என்றபோது "ராணுவ ரீதியில் பிரசச்னையை தீர்ப்போம்" என சொன்னது ரஷ்யா. அதன் பொருளும் அனைவருக்கும் தெரியும். மீண்டும் பின்லாந்தை பிடிக்கவேன்டியதே இல்லை. அதன்மேல் நாலு குண்டை வீசினாலே போதும். போரில் ஈட்டுபட்டுக்கொண்டும், பிரச்சனைகளில் இருக்கும் நாடுகளை நேட்டோவில் சேர்க்ககூடாது என விதி உள்ளது. ஆக நேட்டோவில் எதாவது நாடு சேர்வேன் என ஆரம்பித்தால் ரஷ்யா அதன்மேல் நாலு குன்டுகளை வீசி எல்லைப்பிரச்சனையை கிளப்பினால் போதும்.
ஆக சும்மா தூங்கிக்கொண்டிருந்த ரஷ்ய பனிகரடியை தட்டி எழுப்பியது நேட்டோ. அதற்கான விலையை கொடுத்துக்கொண்டிருப்பது உக்ரைன். இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என எப்படி சொல்ல? எல்லாருமே அவரவர் நாட்டின் சுயநலம், ஏகாத்கிபத்திய மனப்பான்மையுடனும் செயல்படுபவர்கள் தான். அணிசேரா கொள்கையை கடைபிடித்து இந்த பாவங்கள் எதிலும் பங்கெடுக்காமல் நம் நாட்டு நலனுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படவேண்டியதே இந்தியாவுக்கு சிறப்பு என குறிப்பிட்டுள்ளார் நியாண்டர் செல்வன்.