2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் MS தோனி, சனிக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 சீசன் தொடக்க ஆட்டத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அவருக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருப்பார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க தோனி முடிவு செய்து, ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரராக மாறியுள்ளார், இந்த சீசனிலும் அதற்கு அப்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துங்கள்" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் முறையே நான்கு ஐபிஎல் பட்டங்களை வென்ற தோனி, ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் ஆவார். தோனி 121 போட்டிகளில் வெற்றி பெற்று 82ல் தோல்வியடைந்து லீக்கில் இரண்டாவது சிறந்த வெற்றி சதவீதத்தை (59.6) பெற்றுள்ளார்.
தற்போது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் 63.04 என்ற வெற்றி விகிதத்தில் 14 வெற்றிகளுடன் தோனி மிகவும் வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற இருப்பதாலும் பல அணிகள் தங்கள் கேப்டன்களை மாற்றியுள்ளத்தால் சென்னை அணியும் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு இடையில் அணி நிர்வாகம் தான் ஏலத்தில் எடுக்க கூறிய அணி வீரர்களை எடுக்காத காரணத்தால், கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதாக ஒரு தரப்பு கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது, ஏலம் எடுக்கும் போது தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலில் ஜடேஜாவை தோனியை காட்டிலும் அதிக தொகை கொடுத்து சென்னை அணி நிர்வாகம் ஏலம் எடுத்ததில் இருந்தே இந்த அரசியல் தொடர்வதாகவும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கியுள்ளன.
எது எப்படியோ இந்த ஆண்டோடு தோனி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விரைவில் அரசியலில் இறங்குவார் என்றும் வருகின்ற 2024- நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.