Tamilnadu

ஓகே என்றால் முதல்வர் வருவார் என்ற அமைச்சர்கள் "ஆளுநர்" சொன்ன "பதிலால்" பாதியில் ஓட்டம்..!

Rn ravi
Rn ravi

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரவி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து இருந்தார், இந்த விருந்தில் பங்கேற்க போவது இல்லை என திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்து இருந்தன இருப்பினும் ஆளும் கட்சியான திமுக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது.


இந்த சூழலில் தமிழக அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் தங்கம் தென்னரசு இருவரும் ஆளுநரை அவரது இல்லத்தில் சந்திக்க போவதாக செய்தியாளர்களுக்கு தகவல் கூறப்பட்டது இதையடுத்து பத்திரிகை துறையை சேர்ந்த நிருபர்கள் ஆளுநர் மாளிகையில் செய்தி சேகரிக்க சென்றனர்.

அமைச்சர்கள் இருவரும் ஆளுநரை சந்தித்து விட்டு வாடிய முகத்துடன் வந்து செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது, இ ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். ராஜ்பவனில் ஆளுநரைச் சந்தித்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு இத்தகவலைத் தெரிவித்தார்.

தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் நேரில் தெரிவித்துள்ளோம் என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். தமிழக சட்டசபை மாண்பையும் மக்களையும் ஆளுநர் மதிக்காததால் புறக்கணிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் ஆளுநரின் தேநீர் விருந்து பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதல்வர் உள்ளிட்ட யாரும் பங்கேற்கப்போவதில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்த சூழலில் என்ன நடந்தது என ஆளுநர் வட்டாரத்தில் விசாரித்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் புத்தாண்டை ''தை மாதத்திற்கு'' மாற்ற திமுக அரசு அமைந்த போதே நடவடிக்கை எடுக்கப்பட்டது, முன்னோட்டமாக தை மாதம் வழங்க இருந்த பொங்கல் பரிசு தொகுப்பிலும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பைகள் அச்சடிக்க கொடுக்கப்பட்டன ஆனால் அப்போது ஆளுநர் ஆட்சேபம் தெரிவித்த காரணத்தால் புத்தாண்டை மாற்றும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த சூழலில் நீட், குற்றவாளிகள் விடுதலை, கூட்டுறவு சங்க புதிய விதிகள் உள்ளிட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற சூழலில்தான் அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று உள்ளனர். இந்நிலையில் ஆளுநர் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு இன்று மாலை தேநீர் விருந்தில் கலந்துகொள்ளும் போது பேசிக்கொள்ளலாம் சில தகவல்களை கேட்டு இருந்தேன் அதில் முறையான விளக்கம் கொடுக்கவில்லை அதனை சரி செய்யுங்கள் நான் ஒப்புதல் அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 நீங்கள் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே முதல்வர் விருந்தில் பங்கேற்பார் என்று அமைச்சர்கள் தெரிவித்து இருக்கின்றனர், இதை கேட்ட ஆளுநர் சற்று காட்டமாக முகத்தை வைத்து கொண்டு நான் யாருக்கும் எதிராக அரசியல் செய்ய இந்த பொறுப்பிற்கு வரவில்லை, நீங்கள் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கவேண்டும் என்றால் எனது கேள்விகளுக்கு பதில் கொடுங்கள் ஆனால் நான் எழுப்பிய சந்தேகங்களுக்கு இன்று வரை யாரும் பதில் கொடுக்கவில்லை.

மாறாக என் மீதுதான் பக்கத்து மாநிலம் வரை சென்று விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறீர்கள், எனது கேள்விகளுக்கு உரிய பதிலை நீங்கள் சொல்லாதவரை நான் எந்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் கொடுக்க மாட்டேன் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்து இருக்கிறார்.இதனால் என்ன செய்வது என்று தெரியாத அமைச்சர்கள் முதல்வரிடம் போனில் நிலவரத்தை கூறிவிட்டு, செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் உள்ளிட்ட யாரும் விருந்தில் பங்கேற்க போவதில்லை என பத்திரிகை மூலம் தெரிவித்துவிட்டு சென்றனர்.