Tamilnadu

தமிழக டிஜிபி சைலந்திரபாபுவிடம் நேரடியாக பிரதமர் கேட்ட கேள்வி? ஆடி போயிருக்கும் தமிழக அரசு!!

stallin sailanthababu and modi
stallin sailanthababu and modi

அனைத்து யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களின் போலீஸ் டிஜிபிக்கள், மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள் கலந்துகொண்ட 56-வது மாநாடு லக்னோவில் அமைந்துள்ள உத்தரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்றது.


இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.இரண்டு தினங்கள் நடைபெற்ற மாநாட்டில் சில சுவாரஸ்ய சம்பவங்களும், சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன, அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்... 

மூன்று நாட்கள் திட்டமிப்பட்டுள்ள லக்னோ மாநாட்டில் 2-ம் நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார் இந்த மாநாட்டில், இணைய வழி குற்றங்கள், தீவிரவாத தாக்குதல்கள், போதைப் பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது அதன் முக்கிய அம்சமாக ஏற்கனவே தென் மாநிலங்களின் முதல்வர்கள் உடன் உள்துறை அமைச்சர் அமிட்ஷா நடத்திய ஆலோசனை விவரங்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உளவுப்பிரிவுத் தலைவர் அரவிந்த் குமார், ரா உளவுப்பிரிவு தலைவர் சாமந்த் கோயல் உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள் என்றால் இந்த மாநாடு இந்தியாவிற்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் நாட்டின் 37 முக்கிய நகரங்களில் அமைந்துள்ள மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறை தலைமையகங்களில் இருந்தும் இணையம் வழியாக அந்தந்த துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவும் அவர்கள் துறை சார்ந்த நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பவும் பங்கேற்கவும் மட்டுமே பங்களிப்பு செய்யபட்டது ஏன் என்றால் மாநாட்டின் தகவல் வெளியே செல்லாமல் தடுக்க இந்த முறை பயன்படுத்தட்டது.

மாநாட்டில் சைபர் கிரைம், தரவுகளைக் கையாளுதல், தீவிரவாத தடுப்பில் போலீஸாரும், உளவுத்துறையினரும் எதிர்கொண்டுள்ள சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் உள்ள சவால்கள், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக் கப்பட்டன.

மேலும், நாட்டில் பெருகி வரும் குற்றங்களை தடுப்பதில் காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள், காவல்துறையினரின் செயல்பாடு, காவல்துறைக்குத் தேவையான ஆயுதங்கள் தொடர்பாகவும் மாநாட்டில் விவா திக்கப்பட்டது.

2-ம் நாள் மாநாட்டின்போது தங்கள் மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலைமைகள் குறித்து பிரதமரிடம், போலீஸ் டிஜிபிக்கள் விளக்கினர். பின்னர் பிற்பகலில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மதிய உணவு அருந்தினார்.

இந்த 3 நாள் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டது சரி விஷயத்திற்கு வரலாம்.பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், உளவுத்துறை தலைவர்கள், புலனாய்வுத் துறை அதிகாரிகள், அனைத்து மாநில போலீஸ் டிஜிபிக்கள் வந்துள்ளதால் லக்னோ நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது 

 2014-ம் ஆண்டில், பிரதமராக பொறுப்பு ஏற்றதிலிருந்தே, மாநில போலீஸ் டிஜிபி மாநாட்டுக்கு மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்த மாநாட்டின் அனைத்து அமர்வுகளிலும் கலந்து கொள்ளும் அவர், சுதந்திரமாக பேசவும் அதிகாரப்பூர்மற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் காவல்துறை தலைவர்களை ஊக்குவித்து வருகிறார் எனினும் இந்த மாநாடு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன் என்றால் விவசாய அமைப்புகள் தற்போது சட்டத்தை பிரதமர் வாபஸ் வாங்கியதை தொடர்ந்தும் ட்ராக்டர் பேரணி நடத்தப்படும் என தெரிவித்து இருக்கின்றன.

அதோடு சீனாவில் அக்டோபர் மாதம் அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மாநாடு நடக்க இருக்கிறது, சீனாவில் இராணுவம் அரசு எல்லாமே கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் தான் உள்ளது, எனவே இந்த முறை சீன அதிபருக்கு இந்திய எல்லையில் ஏற்பட்ட சறுக்கல் அதாவது இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பல சீன வீரர்கள் பலியாகினர்.

இது ஜீன்பிங் மீது விழுந்த ஆளுமைக்கு கிடைத்த பேரடியாகவும் பார்க்க படுகிறது மேலும் தொழிலதிபர்கள் சொத்துக்களை சீன. அரசு கையக படுத்தி இருப்பதும் அந்த நாட்டில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, இது தவிர்த்து மோடியின் புகழும் சீனாவில் அதிகரித்து வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது, இதையடுத்து தனது புகழை மீட்க சீன. இராணுவம் கம்யூனிஸ. தீவிரவாதம் அதாவது கம்யூனிஸ்ட் இயக்கங்களான மாவோயிஸ்ட் இன்னும் பிற அமைப்புகளுடன் சேர்ந்து இந்தியாவில் பல்வேறு போராட்டங்களை தூண்டி விடலாம் எனவும் திட்டமிட்டு செயல்படுத்தி இருப்பது இந்திய உளவு துறையால் கண்டறியப்பட்டு உள்ளது.

இது குறித்து அனைத்து மாநில டிஜிபிகளுக்கு. என்ன செய்யவேண்டும் என ஒரு அறிக்கையே கொடுக்கப்பட்டுள்ளது, தமிழக டிஜிபியிடம் தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கும் நபர்கள் பட்டியலை கொடுத்து இவர்களுக்கு மேடை பிரச்சாரம் முதல் துண்டு பிரச்சாரம் வரை எந்த அனுமதியும் கொடுக்க கூடாது என ஸ்ட்ரிட் ஆர்டர் போடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக டிஜிபியிடம் பிரதமர் மோடி, மரம் விழுந்து உயிருக்கு போராடிய இளைஞரை தானே தூக்கி ஆட்டோவில் ஏற்றிய ஆய்வாளர் ராஜேஸ்வரி குறித்தும் பிரதமர் கேட்டுள்ளார், பிரதமர் ஒருவர் தமிழகத்தில் நடக்கும் முக்கிய சிறு நிகழ்வுகள் குறித்தும் கவனத்தில் கொண்டு இருப்பது ஆச்சர்யத்தை தமிழக டிஜிபிக்கு கொடுத்துள்ளது.

அத்துடன் மத்திய உள்துறை அமைச்சகம்  தமிழகத்தின் மூளை முடுக்குகளில் நடைபெறும் சில தீவிரவாத பிரிவினைவாத நகர்வுகள் குறித்தும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யும் அமைப்புகள் குறித்தும், 4 ம் தலைமுறை போர் முறை என்பது இனி இருநாடுகளும் மோதி கொள்வதற்கு பதில் நாட்டில் உள்ள குடிமக்களை சினிமா, பிரச்சாரம், சமூக வலைத்தளம் மூலமாக தூண்டி விட்டு நடக்க திட்டங்கள் எதிரி நாடுகளால் தயாரிக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் எனவே மிகுந்த கவனத்துடன் மாநில காவல்துறை செயல்பட வேண்டும் எனவும் தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்த பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் பெண் ஆய்வாளர் ஒருவர் உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் சுமந்து சென்ற தகவலை கூட பிறந்தமோடி பிங்கர் டிப்ஸ்ஸில் வைத்து இருப்பதும், தமிழகத்தில் மூளை முடுக்குகளில் நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் பட்டியலே போட்டு இருப்பதும் நிர்வாக ரீதியான தமிழக அரசை புரட்டி போட்டு இருக்கிறது.

இனி மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முக்கிய முடிவுகள் குறித்தும் அதன் தொடர் நடடிகைகள் குறித்தும் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

அடுத்த சில நாட்களில் பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக நாடு முழுவதும் மத்திய அரசு மேற்கொள்ள போகும் மாற்றம் குறித்து முழுமையான தகவல்களை திரட்டி அளிக்க இருக்கிறோம் அதை தெரிந்துகொள்ள மறக்காமல் TNNEWS24 DIGITAL   YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்து கொள்ளவும்.  இராணுவம் புலனாய்வு தகவல்கள் உங்கள் TNNEWS24 மட்டுமே சிறப்பாக கொடுக்கிறது என்பதே நமது சிறப்பு.