
டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் இருக்கும் என டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்
இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். வயநாடு தொகுதியில் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையே தற்போது ராகுல் காந்திக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் இரட்டை குடியுரிமையுடன் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடிதத்தில், ‛‛ சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2019 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் 2003ம் ஆண்டில் பிரிட்டன் பேக்அப்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களில் ராகுல் காந்தி அதன் இயக்குநர், செயலராக இருப்பதாக உள்ளது. அதேபோல் அந்த நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை கொண்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி பிரிட்டிஷ் குரியுரிமை பெற்றிருந்தால் என்ன? அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவராக இருக்கும்பட்சத்தில், இந்தியக் குடியுரிமையையும், எம்.பி பதவியையும் இழக்க நேரிடும்.ஆம்! பொதுவாக, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி அளிக்கின்றன. இந்தியாவில் அதற்கு அனுமதி இல்லை. நம் நாட்டு குடிமக்கள், இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெறும்பட்சத்தில், அவர் களது இந்தியக் குடியுரிமைத் தானாகவே ரத்தாகும்.
இந்தநிலையில் சுப்ரமணிய சுவாமியின் கடிதத்தின் அடிப்படையில், ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் எழுதியது, மத்திய உள்துறை அமைச்சகம். ஆனால் ராகுல் காந்தி தரப்பிடம் இருந்து சரியான பதில் கிடைக்காமல் போகவேதான், உச்ச நீதிமன்றத்தை அணுகினார், சுப்ரமணிய சுவாமி மேலும் கடந்த ஆண்டு, கர்நாடகத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் இதே பிரச்னையை முன்வைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ‘இந்தியர் மட்டுமே இந்தியத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும். இதுகுறித்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தர விடப்பட வேண்டும்’ என்பதுவும் அவருடைய கோரிக்கைகளில் ஒன்று. இந்தநிலையில் ‘ஏப்ரல் 21-க்குள்விளக்கம் சம்பந்தப்பட்டவர் மற்றும் அதன் துறை விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதே போல் சுப்ரமணிய சுவாமியோ, நான் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியும், அவரிடமிருந்து சரியான பதில் வந்ததுபோல் தெரியவில்லை. எனவே, என் புகார் மீதான நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்’ என டெல்லி உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். மொத்தத்தில், ஷிஷிரின் வழக்கும் சுவாமியின் வழக்கும் ஒரே இலக்கை நோக்கி வெவ்வேறு பாதையில் பயணிக்கின்றன. ராகுல் Vs சுப்ரமணிய சுவாமியின் ஃபைனல் ரவுண்டாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் ராகுல் காந்தி இப்போது தன் எக்ஸ் பக்கத்தில், ``வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அதுவே எதிர்காலத்தில் பிற சமுதாயங்களை குறிவைக்கும் மாதிரியாக மாறும் என்றும் நான் கூறியிருந்தேன்.கிறித்தவர்களே அடுத்த இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் திசையை மாற்றி உள்ளார்.