Politics

எதிர்பாராத ட்விஸ்ட் ஷாக்கான முதல்வர் ? நினைத்தது தலைகீழாக மாறியதால் கடும் அதிர்ச்சி...! வாயை விட்டு சிக்கிய ஸ்டாலின்!

mkstalin
mkstalin

தமிழக முதல்வர், முக ஸ்டாலின் காலை எழுந்து, இரவு உறங்குவதற்குள் தினமும், ஒரு சிலை திறப்பு குறித்த அறிவிப்பையும் கூட்டணி குறித்து அறிக்கையையும்,பாஜக அதிமுக குறித்து கருத்துக்களை வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். பெரும்பாலும், இதை பற்றி பேசியே 4 வருடத்தை ஒட்டிவிட்டார் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. 


தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மடைமாற்றவும் திமுக அரசின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ,மூடி மறைக்கும் வேளைகளில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் எந்த மேடை ஏறினாலும் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி குறித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளர். கூட்டணி குறித்து பேசும் முதல்வரின் பேச்சு தற்போது அவருக்கே திரும்பியுள்ளது இந்த அசிங்கம் தேவையா என்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்  கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், “#NEET விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம்” என முதுகெலும்போடு அறிவிப்பாரா? என்று கேட்டிருக்கிறேன்.விரைவில் விடை கிடைக்கும்! 

இந்தியா முழுவதும் ஏற்கப்பட்டது நீட் தேர்வு.உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஏன் திமுக எம்.பி ஆரசா எந்த கொம்பனாலும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என பேசியுள்ளார் . ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு என கூறினார் ஸ்டாலின். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் முதல் கம்யூனிஸ்ட் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.. அதே போல் திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சி நடத்தும் அண்டை மாநிலங்களில் கேரளா கர்நாடக போன்றவற்றில் மூன்று மொழிகள் கற்று தரப்படுகிறது ஆனால் தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு. ஏன் தமிழகத்தில் எதிர்ப்பு என பார்த்தால்  திமுகவினர் மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள் நீட் வந்ததால் டோனேஷன் கேட்கமுடியவில்லை சாதாரண வீட்டு பிள்ளைகளும் மருத்துவர் ஆகிறார்கள், இது திமுக கண்ணிற்கு உறுத்துகிறது. 

சரி ஏன் மூன்று மொழிகள் கற்றுத்தர எதிர்ப்பு என பார்த்தல் திமுகவினர் அதிகமாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்துகிறார்கள் அவர்களின் அரசு பள்ளியில் மூன்று மொழிகள் கற்று கொடுத்தால்  தனியார் பள்ளிகளின்  வருமானம் அடிவாங்கும் அவ்வளவுதான் இதனால் தான் தமிழகத்த்தில் உணரவுகளை தூண்டி அரசியல் செய்து வருகிறது திமுக அதற்கு கம்யூனிஸ்ட் காங்கிரஸ் ஆதரவு வேற. அவர்கள் ஆளும் மாநிலம் நன்றாக இருக்க வேண்டும் தமிழகம் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என பதவி சுகத்தை அனுபவித்து வருகிறார்கள் 

இது ஒருபுறம் இருந்தால் கூட்டணிக்குறித்து முதல்வர் ஸ்டாலின்  பேசுவது வேடிக்கையாக உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியின் போது காவேரி பிரச்சனை தலைவிரித்தாடியது மேலும் மத்தியில் காங்கிரஸ் இருந்தும் திமுகவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பின் பாஜகமத்தியில் மற்றும்  கர்நாடகாவில் ஆட்சி அமைந்தது காவேரி பிரச்னை முடிவுக்கு வந்தது. தற்போது கர்நாடகாவில்  காங்கிரஸ் ஆட்சி வந்தது காவேரி பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கூத்தினை குறித்து பேசும்  முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட்டால் தான்  காங்கிரஸ் உடன் கூட்டணி என்றும்  .முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த இசைவு தெரிவித்தால் தான் கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி என்றும்  சொல்ல தைரியம் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. "ரகசியம் இருக்கிறது" என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று தெரியாதவர் அரங்கேற்றும் இந்த "ஊட்டி நாடகத்தை" மக்கள் யாரும் நம்பப் போவது இல்லை.