24 special

ராகுல் காந்தி பானியில்...! புதிய வியூகம் எடுத்துள்ள பாரதிய ஜனதா கட்சி

Bjp , Rahul gandhi
Bjp , Rahul gandhi

கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போல் கர்நாடகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறது நாட்டை ஆளும் பாஜக..


கர்நாடகா சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24 (2023) அன்று முடியவுள்ள நிலையில், வரும் தேர்தலை எதிர்நோக்கி நாட்டை ஆளும் பாரதிய ஜனதா கட்சி புதிய வியூகம் எடுத்துள்ளது. அந்தவகையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்ச்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியானது நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறியும் வகையில், ராகுல் காந்தியின் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,000 கி.மீ  தொலைவில் பாரத் ஜோடா யாத்திரையை  மேற்கொண்டது.

பாரத் ஜோடா யாத்திரையால் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், வரும் 2023 சட்டமன்றத் தேர்தலில் 224 தொகுதிகளை கைப்பற்றும் விதமாக ராகுல் காந்தியின் நடைபயணத்தை போன்று பாரதிய ஜனதா கட்சியும், தனது முதல் கட்ட யாத்திரையாக “விஜய் சங்கல்ப் யாத்திரை” இன்று கர்நாடக மாநிலம் சாமரஜா நகரிலிருந்து தொடங்குகிறது. இந்த யாத்திரையை பாஜக அரசின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த யாத்திரையானது நான்கு பகுதிகளுக்கு செல்லும் என்பது குறிபிடத்தக்கது.

விஜய் சங்கல்ப் யாத்திரையின் நோக்கம்:கடந்த 4 ஆண்டுகளில் ஆளும் பாஜக செய்த பணிகளை கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மக்களிடம் கொண்டு செல்வதே இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம். மேலும்,

இந்த பயணம் 8,000 கி.மீ துரத்தை கடக்கும், அதனுடன் 80 பேரணிகள், 74 பொதுக்கூட்டங்கள் மற்றும் சுமார் 150 சாலைகளில் நிகழ்ச்சிகளை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.  

இந்த யாத்திரை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது; விஜய் சங்கல்ப் யாத்திரை கர்நாடகாவின் நான்கு பகுதிகளுக்குச் செல்லும். இந்த யாத்திரை மூலம் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதியாகி உள்ளதாக கூறினார். மேலும், யாத்திரை அனைத்தும் கர்நாடக மாநிலத்திலுள்ள தாவங்கரே பகுதியில் ஒரே இடத்தில் வந்து நிறைவடையும் என்று அண்ணாமலை கூற்யுள்ளார்.

ராஜ்நாத் சிங் வருகை:பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நந்தகாட்டில் இருந்து மார்ச் 2-ஆம் தேதி மற்றொரு யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று பாஜக  தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகா வருகை:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகா மாநிலத்திற்கு மார்ச் 3 தேதி வருகை தரவிருப்பதாக பாஜக மேலிடம் கூறியுள்ளது.இந்த ஒருநாள் பயணத்தில் அவர் இரண்டு யாத்திரைகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுகூட்டத்தில் உறையாற்றுவார் என்று பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகை:சுமார் 20 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை மார்ச் 25-ஆம் தேதி தாவங்கேரில் நிறைவடைவதால், விஜய் சங்கல்ப் யாத்திரையின் வெற்றி குறித்தும் அது எந்த அளவுக்கு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது என்று அங்கு நடைபெறும் பொதுகூட்டத்தில் பிரதமர் உறையாற்ற உள்ளார். பிரதமர் வருகையோட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதிலிருந்தே மேற்கொள்ளப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  

விஜய் சங்கல்ப் யாத்திரை நான்கு பகுதிகளிலும் ஒன்றிணைந்து மார்ச் 25-இல் கர்நாடகா மாநிலம் தாவங்கரேயில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.