24 special

திருமா கனவிற்கு ஷாக் கொடுக்க திமுக எடுக்க போகும் முடிவு?

thiruma ,stalin
thiruma ,stalin

திமுக கூட்டணியில் பாமக சேர பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வரும் சூழலில் அதை தடுக்கும் வண்ணம் திருமாவளவன் காய் நகர்த்தி வருவது நேற்றைய தினம் விசிக நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் தெளிவாக திமுக தலைமை கண்டறிந்து இருக்கிறதாம்.


நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் அரசியல் ரீதியாக எவ்வளவு பின்னடைவை சந்தித்தாலும் பாஜக மற்றும் பாமக இருக்கும் இடத்தில் நாங்கள்  இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.திமுக கூட்டணியை  ஆதரிக்கிறோம். அண்மையில் நடந்த 5 மாநில தேர்தல்கள் வரும் போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போன்று தமிழகத்திலும் தேர்தல் நெருங்க நெருங்க என்ன செய்யப் போகிறார்கள் என்று  பாஜகவினருக்கே தெரியாது. காரணம், அது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில் இருந்து தான் முடிவு செய்யப்படும்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து திமுக அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில் தான் இருக்கின்றன. திமுக ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அமிட்ஷா கட்டுப்பாட்டில் இருக்க கூடாது என திருமாவளவன் பேசி இருந்தார்.

திருமாவளவன் பேச்சை கவனித்தால் இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது தமிழக காவல்துறையை நேரடியாக விமர்சனம் செய்வது போன்று முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்து இருக்கிறார் அத்துடன் கூட்டணியில் பாமக வந்தால் வெளியேறுவோம் என தெளிவாக கூறி இருக்கிறார் திருமாவளவன்.

இது குறித்து திமுக தரப்பில் சிலர் தெரிவித்ததாவது, திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்தது அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்த போது முதல் நபராக வாழ்த்து தெரிவித்தது, தொடர்ச்சியாக தமிழக காவல்துறை மற்றும் திமுக அரசை விமர்சனம் செய்வதை நாங்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறினால் நிச்சயம் திருமாவளவன் அதிமுக பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை நாங்களும் அறியாமல் இல்லை, கடந்த முறை எங்களுக்கு எதிராக மக்கள் நல கூட்டணி என்ற ஒன்றை ஆரம்பித்தவர்கள் இப்போது எங்களுக்கு எதிராக தனியாக அணி அமைத்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணியை விமர்சனம் செய்பவர்கள் இனியும் இதே போன்று விமர்சனங்களை தொடர்ந்தால் நேரடியாக பதிலடி கொடுக்கப்படும் என பொங்கு கின்றனர் உடன் பிறப்புகள்.

எப்படியும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் உறவை முறித்து விடுவார் அப்போது அதிமுக கூட்டணியில் இணைந்து 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீட் வாங்கி தேர்தலை சந்திக்க புது ரூட் போட்டு இருக்கிறதாம் விசிக அதன் காரணமாகதான் காவல்துறை மீது விமர்சனம் வைத்ததோடு நில்லாமல் அமிட்ஷா கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்க கூடாது ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என திருமாவளவன் அழுத்தி தெரிவித்த விதத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இதே போன்று மீண்டும் ஒருமுறை விசிக, திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்தால் நிச்சயம் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற்ற படுவார் என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் வட மாவட்டத்தை சேர்ந்த  மிக மூத்த அமைச்சர் ஒருவர் மூலம் அரங்கேர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.