பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அடித்த பல்டிதான் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது, இந்தி மொழி கற்று கொள்வதில் தவறு இல்லை என தனியார் முன்னணி ஊடகம் ஒன்றிற்கு சில ஆண்டுகள் முன்பு பேட்டி கொடுத்து இருந்த சாலமன் பாப்பையா கூறிய நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது நிலைப்பாட்டை அப்படியே மாற்றி கொண்டு பல்டி அடித்துள்ளார்.
அதாவது சில நாட்களுக்கு முன்னர் சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார் அதாவது எனக்கு விளங்காத மொழியில் ஒரு விருது கொடுத்து இருக்கிறார்கள் அதை வைத்து நான் என்ன செய்ய இப்போது அந்த விருது மேலே ஒரு இடத்தில் இருக்கிறது என குறிப்பிட்டு நீண்ட விளக்கமாக பேசி இருந்தார், அதாவது இந்தி மொழி தனக்கு தெரியாது எனவும் மேலும் தற்போது பத்மஸ்ரீ விருதை ஒரு மூலையில் வைத்து இருப்பது போன்று பேசி இருந்தார் பாப்பையா.
இந்த சூழலில் பாப்பையாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன என TNNEWS24 தரப்பில் தெரிந்த வட்டாரத்தில் விசாரணை செய்த போது சில தகவல்கள் கிடைத்தன, அதாவது தமிழக அரசு குறிப்பாக திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்ததில் இருந்து தங்களுக்கு சாதகமான நபர்களுக்கு பல்வேறு வாரியங்கள் உள்பட பல்வேறு பதிவிகளை கொடுத்தது குறிப்பாக சுபவீ தொடங்கி ஜெயரஞ்சன் வரை இந்த பட்டியல் நீண்டது.
இந்த சூழலில்தான் பாப்பையாவிற்கு அது போன்று ஒரு பதவியை வழங்களாம் என தமிழக அரசு முன்வந்த போது சிலர் அவர் மத்திய அரசு ஆள் எனவும் அவருக்கு பத்மஸ்ரீ விருதெல்லாம் கொடுத்து இருக்கிறார்கள் போதாத குறைக்கு தனியார் ஊடகம் ஒன்றில் இந்திக்கு ஆதரவாக பேசி இருக்கிறார் அவருக்கு பொறுப்பு கொடுத்தால் அது நமக்கு எதிராக அமையும் என சொல்லி இருக்கிறார்கள்.
இந்த தகவல் பாப்பையா காதிற்கு வர உடனடியாக இந்திக்கு எதிராக அவர் பேசியதாக கூறப்படுகிறது, மேலும் சாலமன் பாப்பையா மிகவும் பிரபலமான பட்டிமன்ற தொடரில் இருந்து அவருக்கு பதிலாக வேறு ஒருவரை கொண்டுவரலாம் என்ற பேச்சு காரணமாகவும் பாப்பையா பல்டி அடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது இந்த இரு கரணங்கள் தான் திடீர் என பாப்பையா இந்திக்கு எதிராக தான் பெற்ற பத்மஸ்ரீ விருதிற்கு எதிராகவும் பேச காரணமாக பார்க்க படுகிறது.
விருதுகளை காட்டிலும் பதவி முக்கியம் என்ற நிலைக்கு பாப்பையா வந்து விட்டாரோ? இது குறித்து அவர் நேரடியாக விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.