Tamilnadu

ஒரே நாளில் ஏற்பட்ட தலைகீழ் திருப்பம்...ஸ்டாலினுக்கு ஷாக் மேல் ஷாக்...இப்போ தெரிகிறதா அண்ணாமலை யாரென்று!

annamalai. mkstalin
annamalai. mkstalin

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் புதிதாகத் திறக்கும் டாஸ்மாக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் கருணாநிதி பெயரைச் சூட்டுவதை வாடிக்கையாக வைத்துளார்கள் மேலும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காமராசர் பெயரில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் காயிதே மில்லத் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி ஆகியவைச் சீரமைப்புச் செய்து, புதிதாகத் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியானது. 


இதற்கிடையே கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பொதுக் கழிப்பிடம் ஒன்றில் கக்கன் மற்றும் அண்ணா என மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை 95 ஆவது குறிச்சி ,அண்ணா நகரில்  சில்வர் ஜூபிலி என்ற பகுதி அருகே மாநகராட்சி சார்பில் பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் கழிப்பிடத்துக்குப் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டது. 

புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தக் கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பெயரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கன் அவர்களின் பெயரும் எழுதப்பட்டு  இருப்பது தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிப்பிடத்துக்கு மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி இருப்பது தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுக் கழிப்பிடத்தில் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை  கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிப்பறைக்கு வைத்திருக்கிறார்கள். எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன?உடனடியாக, கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின்  அவர்களை வலியுறுத்துகிறேன். என் பதிவிட்டிருந்தார்  இன்னிலையில் தலைவர்கள் பெயர் எழுதபட்டு இருந்ததை மாநகராட்சி நிர்வாகம் பெயிண்ட் கொண்டு மறைத்ததுள்ளது.

அண்ணாமலை தமிழக பொறுப்பிலிருந்தது மாற்றப்பட்டாலும்  அவரின் குரல் தமிழகம் முழுவதும் ஒலித்து கொண்டுதான் உள்ளது திமுகவிற்கு அன்னமாயின் மீது பெரும்  பயம் உள்ளது என்பதை  இந்த சம்பவம் எடுத்துரைத்துள்ளது . மேலும்  அண்ணாமலைக்கு அடுத்த பதவிகள் குறித்து பேசுச்சுகள் அடிபட்டு வரும் நிலையில் அண்ணாமலையின் பவர் தமிழ்கத்தில் இருந்து கொண்டே தான் உள்ளது என அரசியல் விமசகர்கள் கூறி வருகிறார்கள்.