இராஜேந்திர பாலாஜியை கைது செய்தே ஆகவேண்டும் என ஆளும் கட்சி முடிவு செய்து பல்வேறு தனி படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் அனைவருக்கும் போக்கு காட்டி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்க ராஜேந்திர பாலாஜி முயன்று வருகிறார். இந்த சூழலில் ஹெலிகாப்டர் உடன் ராஜேந்திர பாலாஜி இருக்கும் புகைப்படம் வைரலாகும் நிலையில் திமுகவினர் புலம்பி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் உட்பட சிலரிடம் ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி, 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துவிட்டதாக விருதுநகர் போலீஸில் புகார் பதிவானது. இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அரசு நிர்வாகம் சுற்றறி வருகிறது. இதுவரை 8-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர் தனிப்படை போலீஸார். ஆனால், அவர் எங்கேயிருக்கிறார் என்று தெரியவில்லை. அடுத்தடுத்த சட்ட ஆலோசனைகளை ராஜேந்திர பாலாஜி செய்துவருகிறார் என்ற தகவல்கள் மட்டும் வெளிவருகின்றன.
எப்படிச் சிக்காமல் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி? என திமுகவினர் ஆதங்கப்பட்டு இருக்கும் சூழலில் தற்போது ராஜேந்திர பாலாஜி ஹெலிகாப்டர் பின்னணியில் மலை பிரதேச பகுதியில் இருப்பதாக வெளியான புகைப்படத்தால் புலம்பி தவித்து வருகின்றனர் திமுகவினர், அமைச்சராக இருக்கும் காலத்தில் திமுகவை அதிர வைத்த ராஜேந்திர பாலாஜி தற்போது திமுக ஆட்சியிலும் திமுகவினரை புலம்ப வைத்து இருக்கும் சம்பவம் அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.