பூந்தி பாடல்" குருவி மண்டை புள்ளிங்கோவிற்கு ஆப்பு வைத்த காவல்துறை! இனிதான் இருக்கு கச்சேரி !!Saravedi kannan
Saravedi kannan

"மஜாவாக" மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி … பால்வாடியில வாங்கி கொடுத்தேன் பூந்திய, எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்திய.” அவை விட்டுட்டு போனாலும் எனக்கு கவலை இல்லை நான் முடிச்சுட்டேன் சோலியை என சர்ச்சை பாடல் பாடிய குருவி மண்டையனை தமிழக காவல்துறை தேடி வரும் தகவல் வெளியாகியுள்ளது.

26 வயதான கானா பாடல் பாடும் சரவெடி சரண் என்பவன் கானா பாடல் பாடி வருகிறான் இவன் கடந்த 2020 ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் சிறுமியை கர்ப்பமாக்குவேன் என பாடல் பாடி இருக்கிறான் இந்த பாடல் தற்போது இணையத்தில் பரவி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.

பள்ளி குழந்தைகள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேலையில் இது போன்ற பாடல்கள் குற்றங்களை அதிகரிக்கவும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமையும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர்.

இது திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐ.பி.எஸ் கவனத்திற்கு செல்ல அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது, தற்போது இந்த வீடியோ மெதுவாக பரவ துவங்கியது. இதனை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சூழலில் அவ்வீடியோ திருவள்ளூர் எஸ்.பி., வருண் குமார் கவனத்திற்கு சென்றுள்ளது. அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக வருண் குமார் தெரிவித்துள்ளவர், போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அச்சட்டப் பிரிவின் படி சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்க தூண்டுபவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சர்ச்சை பாடலை பாடிய புள்ளிங்கோ விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது, இனி இது போன்ற தவறான உள் நோக்கம் கொண்ட பாடல்களை பாடாத வண்ணம் காவல்துறை நடவடிக்கை இருக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share at :

Recent posts

View all posts

Reach out