தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி திருப்பங்கள் ஒவ்வொன்றையும் தமிழக அரசியலில் பாஜக நிகழ்த்தி வருகிறது. அதிலும் திமுகவிற்கு வேட்டு வைப்பதில் பாஜகவின் பங்கு சிறப்பானதாகவும் அவர்களை சமாளிக்க முடியாமல் திமுக திணறி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை தொடங்கினார். தற்போது இந்த நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களை கடந்த வாரங்களில் கன்னியாகுமரியை அடைந்தது. கன்னியாகுமரியில் மூன்று நாட்களாக நடை பயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை திமுகவிற்கு எதிரான கருத்துக்களை சரமாரியாக முன்வைத்து வருகிறார்.
யாத்திரையின் நோக்கம் ஒவ்வொன்றையும் அண்ணாமலை நிறைவேற்றி வருகிறார் மக்களின் குறைகளையும் கேட்டு அறிந்து அதற்கான நிவாரங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் மக்களுடன் உரையாடும் பொழுது சிறப்பு காட்சிகள் வைத்து திமுகவில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் விளைவுகள் மக்களை ஏமாற்றும் வேலைகளின் திட்டங்கள் ஆகியவற்றை அவர்கள் கட்சியினர்களே கூறும் வீடியோ பதிவுகளையும் பெரிய திரையில் வெளியிட்டு தனது பிரச்சாரத்தை திறம்பட செய்து வருகிறார்.
தற்போது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தொடர்பாக திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது ஆனால் அந்த நீட் தேர்வால் ஏழை மற்றும் நடத்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாங்களாகவே முயன்று அரசு பள்ளிகளில் தற்போது மருத்துவ சீட்டுகளை பெற்றுள்ளனர். இதற்கு முன்பு அதாவது நீட் வருவதற்கு முன்பு என்ன குளறுபடிகள் இந்த மருத்துவ கல்லூரி சேர்க்கையில் நடைபெற்றுள்ளது என்பதை ஆற்காடு வீராசாமி பேசிய காட்சி ஒன்றை வெளியிட்டு திமுகவின் முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.
அந்த வீடியோ பதிவில், தேர்தல் நேரத்தில் கள வேலைகளை மேற்கொள்வதற்கு பணம் தேவைப்படும் அதனால் பொருளாதார ரீதியாக என்னிடம் உதவி கேட்பார் அந்த வகையில் நான் அமைச்சராக இருந்த பொழுது பலமுறை என்னை நேரில் வந்து சந்திப்பார் அப்பொழுது அவர் மருத்துவ கல்லூரி ஒன்று வைத்திருந்தார். மருத்துவ கல்லூரியின் சேர்க்கை பட்டியல் தயாரானதுடன் அதன் முதல் நகலை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்பார் ஏனென்று கேட்டால், நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நபர்களுக்கு நாங்கள் மருத்துவக் கல்லூரியில் சீட்டுகளை பிளாக் செய்து விடுவோம் பிறகு அவர்களின் பெயர்கள் அனைத்தும் அரசு கல்லூரி லிஸ்டில் வந்தவுடன் அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடுவார்கள் இதனால் நாங்கள் பிளாக் செய்த மருத்துவ சீட்டுகள் அனைத்தையும் அன்லாக் செய்து மருத்துவ இடங்களை நாங்கள் நிரப்பி கொள்வோம் அதற்காக அரசு கல்லூரியில் இடம் பெறும் மாணவர்களின் பட்டியல் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடுவதற்கு முன்பாகவே அவருக்கு நகல் ஒன்று சென்று விடும் என்று திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி பேசியிருந்த ஆடியோவை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டது பேசுபொருளாகி வருகிறது.
இந்த நிலையில் அடுத்தபடியாக இருக்கும் துரைமுருகன், பொன்முடி, கே என் நேரு போன்ற தலைவர்கள் அனைவரும் கூடி பேசி உள்ளார்களாம்! என்னய்யா ஆற்காடு வீராசாமி பேசுனதெல்லாம் இப்படி பட்டென்று போட்டு காமிச்சிட்டாங்க, நம்ம ஏரியாவுக்கு எல்லாம் யாத்திரை வரும்போது என்ன நடக்கும்னு தெரியலையே! என்று அவர்கள் ஆலோசித்துக் கொண்டதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில பாஜக கமலாலய தலைவர்களிடம் விசாரித்த போது இப்போது இருக்கும் மூத்த அமைச்சர்கள் ஏரியாவில் யாத்திரை வரும்போது பாருங்கள் என்ன நடக்கிறது என சஸ்பென்ஸ் வைத்தார்கள்...!