
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இரு வேறு அறிக்கைகள் கொடுத்துள்ளார் ஒன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளி தட்டில் சாப்பிட்டதாக குறிப்பிட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துங்கள் உங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிடும் யூடுப்பர்ஸ் மற்றும் ஜால்ராக்களை நம்பாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். அது பின்வருமாறு :-
வெள்ளித் தட்டில் சாப்பிடும் மு.க.ஸ்டாலின் அவர்களே! கோவையில் கூட்டம் சேர்த்து ஆடம்பர விழா நடத்தும் மு க ஸ்டாலின் அவர்களே ஒன்றரை கோடி ரூபாயில் புதிய கார் வாங்கி ஊர்வலம் செல்லும் மு க ஸ்டாலின் அவர்களே.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று உங்களிடம் கேட்பதற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது ஆனால் உங்களிடம் மாதம் 20 லட்சம் ரூபாய் காசு வாங்கிக்கொண்டு உங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிடும் யூ டியூப் சேனல்கள்
உங்களுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் ஊடக நண்பர்களும் உங்களை நம்பர்-ஒன் முதல்வராக தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியடையும் உங்களின் ஜால்ராக்கள் அத்தனை பேருமே மக்களின் துன்பங்கள் மேலும் மேலும் அதிகரிக்க உங்களுக்கு தூபம் போடுகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
திமுக அரசே முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தியுள்ளார், அவரது மற்றொரு அறிக்கை ஒன்றில் மதநல்லிணக்க கூட்டத்துக்கு போனதுக்கே ஒருத்தரை இஸ்லாத்திலிருந்து நீக்கிட்டாங்க..
அதுவும் அந்த சமுதாயத்தின் பிரபலமான செய்கு தம்பி பாவலரின் பேரனை
இந்த நிலையிலும் நம்ம ஹிந்து சகோதரர்கள் பலர் இன்னும் நடுநிலைன்னு வீணாப்போறாங்க
தமிழக அரசாங்கமும் தமிழகத்து அரசியல் கட்சிகளும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் கள்ள மௌனம் சாதித்து வருகின்றனர்.
ஒரு போட்டி அரசாங்கத்தை ஜமாத் நிர்வாகங்கள் நடத்தி வருகின்றன பல அப்பாவி இஸ்லாமிய மக்கள் இதில் பாதிக்கப்படுகிறார்கள் இதுகுறித்து தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் அர்ஜுன் சம்பத்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.