24 special

அதிகரிக்கும் உயிர் இழப்புகள்... அரசியல் ஃபார்முக்கு வந்த பயில்வான் ரங்கநாதன்!! ஒரே வீடியோவில் மொத்த திமுகவும் காலி

Ranganathan
Ranganathan

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த வாரத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தவர்கள் வாந்தி, மயக்கம் மற்றும் கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதற்குப் பிறகுதான் தெரியவந்துள்ளது அவர்கள் அருந்திய கள்ளச்சாராயத்தில் மெத்தனாலின் அளவு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இதனை அடுத்து தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டு உயிரிழக்க ஆரம்பித்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பிரிவினும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இதனை அடுத்து அம்மாவட்ட ஆணையர் பணியை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எஸ் பி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


மேலும் இந்த விவகாரத்திற்கு அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் அளித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் சென்றனர். 

ஆனால் இன்றளவும் முதல்வர் கள்ளக்குறிச்சி பக்கம் எட்டி பார்க்கவே இல்லை. இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்திகள் இருந்ததால் முதல்வர் வழக்கம் போல் தனது மகனையே அந்த விவகாரத்திற்கு அனுப்பி வைக்க மேலும் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வந்தனர். மேலும் இதுகுறித்து அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் திரு ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும், மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமியும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மனு அளித்து வந்துள்ளனர். இப்படி தமிழக அரசியல் களம் முழுவதிலும் தமிழக அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவெடுத்து வருகிறது. 

இந்த நிலையில் சினிமா அரசியல் விமர்சகராக அறியப்பட்டு வருகின்ற பயில்வான் ரங்கநாதன் கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறித்து பேசி உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கலெக்டர் மாற்றப்பட்டு விட்டார், மாவட்ட காவல் அதிகாரி மாற்றப்பட்டு விட்டார், ஆனால் அந்த மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் இருக்கிறார் அவர் மட்டும் ஏன் இன்னும் பதவியில் இருந்து தூக்கப்படவில்லை? மாவட்ட ஆணையர் மற்றும் காவல் அதிகாரி என அனைவரையும் கண்காணிக்கும் பொறுப்பில் அமைச்சர்தான் இருக்கிறார் ஆனால் அவரே தற்போது மாற்றப்படாமல் உள்ளார் ஒரு மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவராக தான் இருக்க முடியும் என்று திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.