24 special

மகனை அருகில் வைத்துக் கொண்டா இதெல்லாம் செய்வார்கள்... சர்ச்சையில் நடிகையின் புகைப்படம்...

swetha
swetha

விளம்பரங்களில் நடித்து அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகம் ஆகி இன்று பல திரைப்படங்களிலும் சைட் ரோல்களில் நடித்து வரும் அளவிற்கு வளர்ந்துள்ள நடிகை தான் ஸ்வேதா தமிழ்!! இவர் சென்னையில் வசித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்!! முதலில் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்வேதா 1998 ஆம் ஆண்டில் சுந்தர் கே விஜயன்  இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்த அண்ணாமலை இந்த தொடரில் முதல் முதலாக  அறிமுகமானார். இந்த சீரியல் தான் ஸ்வேதாவிற்கு முதல் சீரியலில் கிடைத்த வாய்ப்பாகும். மேலும் இவர் மலர்கள், நிம்மதி, உங்கள் சாய்ஸ், திருப்பாவை மற்றும் வம்சம் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். 


அதன் பிறகு ரோஜா மற்றும் செம்பருத்தி போன்ற சீரியல்களில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். இவருக்கு டான்ஸ் ஆடுவது மற்றும் பாட்டு பாடுவது ஆகியவை மிகவும் பிடிக்கும் என்பதால் பல இடங்களில் இது போன்று பாட்டு பாடி டான்ஸ் ஆடுவது என இருந்து வந்தார். இதனை பார்த்து இவர் சூப்பராக நடனம் ஆடுகிறார் என்பதற்காக ஒரு தனியார் தொலைக்காட்சி  நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவான  மானாட மயிலாட சீசன்1 ல் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அந்த சோவில் சூப்பராக கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் தனது இளைய மகனான அரவிந்த் பாரதியுடன் சேர்ந்து சூப்பர் மாம்!! என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு வீடு மனைவி மக்கள் என்ற நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் சேர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 

இதனால் அவருக்கு நிறைய ரசிகர்கள் அடுத்தடுத்து உருவாக்கிக் கொண்டே இருந்தனர். இவரின் பின்னணி பார்க்கும் பொழுது சிவாஜி காலத்தில் திரைப்படங்களை தயாரித்து வந்த பிரபல தயாரிப்பாளரான கல்யாணராமனின் பேத்தி என்பது தெரிய வந்தது. இவ்வாறு தொடர்ந்து தனது எந்த ஒரு பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது திறமையால் வளர்ந்து வரும் ஸ்வேதா  தமிழ் தற்பொழுது பேட்டி ஒன்று தனது திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து  கூறியுள்ளார்!! இதனைத் தொடர்ந்து இவர் கூறிய கதையைக் கேட்கும் பொழுது இவரின் ரசிகர்கள் மிகவும் வியப்புடன் உண்மையாகவே இப்படி தான் இவர்களின் திருமணம் நடந்ததா என்று பார்த்து வருகின்றனர்!! அவர் கூறியிருப்பது என்னவென்றால்...

ஸ்வேதா தமிழ் சீரியல்களில் பணியாற்றும் பொழுது தான் நடித்த சீரியல் ஒன்றை இயக்கி வரும் இயக்குனரான தமிழ் பாரதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது தனது காதல் திருமண வாழ்க்கையைப் பற்றி கூறியுள்ளார்!! அதில் தனது கணவரான தமிழ்  பாரதியின் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி அவரை காதலித்து வந்ததாகவும், அதன் பிறகு  ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து அவருடன் live in வாழ்க்கையில் இருந்து வந்ததாகவும் அதில் இவர்கள் இருவருக்கும்  குழந்தை ஒன்று பிறந்ததை அடுத்து இவர்களின் இரு வீட்டிலும் இவர்களை ஏற்றுக் கொண்டார்களாம்!! 

அதன் பிறகு இந்த தம்பதிகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு நடந்த திருமண நிகழ்ச்சி விழாவின்போது ஸ்வேதா மற்றும் இயக்குனர் தமிழ் ஆகியோருக்கு இடையில் இவர்களின் மகன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியது. மேலும் திருமணத்திற்கு வந்தவர்களிடம் தனது மகனே தன்னுடைய சகோதரியின் மகன் என்று கூறி மழுப்பியதாகவும் ஸ்வேதா தற்பொழுது பேட்டியில் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது!!