Tamilnadu

சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்த ராசா, எதிர்த்து போராடிய திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் செக் மேட் செய்ததா பாஜக !

Rasa
Rasa

தற்காலிக சபாநாயகராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய  ஆ ராசாவை சொந்த கட்சியை சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களே எதிர்த்து குரல் எழுப்பிய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் பாஜகவின் கேம் பிளான் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


12 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று இரு அவையிலும் நேற்று 3-வது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவை மரபை குலைக்கும் வகையில் செயல்பட்ட மாநிலங்களவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனாவை சேர்ந்த தலா 2 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலா ஒரு எம்.பி.யும் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாதபடி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த 16 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறையிட்டனர். ஆனால், அவர் சஸ்பெண்டு உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் முதல் எழுப்பி வருகிறார்கள். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு விவகாரத்தை நேற்றும் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பினார்கள். சஸ்பெண்டு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று இரு அவையிலும் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

அப்போது சிறிது நேரம் ஆmராசா தற்காலிக சபாநாயகராக அவையை வழிநடத்தினார், கூச்சலில் ஈடுபட்டவர்களை அமைதியாக அமரும் படி தெரிவித்தார், இந்த நேரத்தில் கடமை தவறாமல் ஆ ராசா உறுப்பினர்களை அமர சொன்னதும் அதை அவர்கள் ஏற்காமல் தொடர்ந்து அவைக்கு இடையூறு ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.

இதையடுத்து அவையை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் ராசா இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.மக்களவை துணை சபாநாயகர் பதவியை கைப்பற்ற ஆ ராசா முயற்சித்து வருவதாகவும், அப்படி துணை சபாநாயகர் பதவியை கைப்பற்றினால் கத்தியாக தலைக்கு மேல் தொங்கும் 2ஜி வழக்கில் இருந்து தப்பி விடலாம் என கணக்கு போட்டு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

அதற்கு தூபம் போடும் வகையில் பாஜக செக் மேட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது எதிர்க்கட்சிகளை வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் ஒன்று சேர விடாமல் இருக்க வியூகம் நடத்தி வருகிறதாம் பாஜக.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.