Tamilnadu

"உக்ரைனில்" இறுதி கட்டத்தை எட்டியது நிலைமை "போர் வெடித்தால்" வெல்லப்போவது யார்?

Ukraine Russian
Ukraine Russian

உக்ரைன் ரஸ்யா மோதல் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- உக்ரைனில் கடைசி கட்ட பதற்றம் நிலவுகின்றது, இனி வெல்லபோவது யார் தோற்க போவது யார் என்பது சில தினங்களில் தெரியலாம்


உண்மையில் இப்பொழுது சண்டையிட எந்தநாடும் தயாராக இல்லை ஒவ்வொரு நாட்டுக்கும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள், ஆனால் ரஷ்யாவினையும் சீனாவினையும் கட்டிவைக்க அமெரிக்காவுக்கு சில காரணங்கள் தேவை, அமெரிக்காவின் மிகபெரிய வர்த்தகம் எரிபொருளும் ஆயுதமும் இந்த இரண்டும் கொட்டும் மிகபெரிய பணத்தில்தான் அமெரிக்க வல்லரசு இயங்கி கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டுக்கும் குறுக்கே யார் வந்தாலும் அமெரிக்கா விடாது , விட்டுவிட்டால் நிலைக்க முடியாது ரஷ்யா மிகபெரிய எரிபொருள் நாடு அதுபோக ஆயுதபலமும் அதிகம், அந்த ரஷ்யா 1990களில் மிக மோசமாக இருந்தபொழுதுதான் அமெரிக்கா உலக அரங்கில் அடித்து ஆடியது, சதாம் கொலை லிபிய அட்டகாசம் ஆப்கன் தாண்டவம் என ஆடியது அப்பொழுதுதான்.

ஆனால் புட்டீன் ரஷ்யாவினை பலமாக்கியதில் இருந்து அமெரிக்காவுக்கு கடிவாளமிடபட்டது, ரஷ்ய எண்ணெய் ஆங்காக்கே பாய அமெரிக்காவின் வர்த்தகம் அடிவாங்கியது, இன்னொரு பக்கம் சீனாவின் உற்பத்தியும் அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்திற்று,

இந்நிலையில்தான் இனி ரஷ்யாவுக்கு கடிவாளமிடாமல் தன் செல்வாக்கினை தக்கவைக்க முடியாது என முடிவோடு திரிகின்றது அமெரிக்கா, உக்ரைனில் ரஷ்யாவுக்கு வைத்திருப்பது மிகபெரிய வலை, அங்கே ரஷ்யா கால் வைத்தால் அடுத்தநொடி பொருளாதார தடை பாயும் அதன் பின் ரஷ்ய எண்ணெயும் ஆயுதமும் விற்காது அந்த வியாபாரம் அமெரிக்கா கைக்கு செல்லும்.

அதே நேரம் ரஷ்யா தாக்கினால் நிச்சயம் அமெரிக்காவினை மட்டும் சில ஏவுகனைகளால் தாக்கிவிட்டு ரஷ்யா பதுங்காது, அதன் இலக்கு அக்கம் பக்கம் ஐரோப்பிய நாடுகளாக இருக்கும் அந்நேரம் அவற்றுக்கு ஆயுதம் விற்று கனத்த காசுபார்கும் அமெரிக்கா.

இப்படி எது நடந்தாலும் தனக்கு லாபமென நேர்த்தியாக திட்டமிட்டு வருகின்றது அமெரிக்க வல்லரசு, புட்டீனுக்கும் இது தெரியும் என்பதால் அமெரிக்காவுக்கு ஒரு காரணத்தை கொடுத்துவிட கூடாது என கவனமாக காய்நகர்த்துகின்றார், இதில் எது நடந்தாலும் அமெரிக்காவுக்கு எப்படி லாபமோ அப்படி சீனாவுக்கும் லாபம் நிறைய உண்டு என்பதால் கொஞ்சம் கவனமாகவே கால் வைக்கின்றது அமெரிக்கா.

இப்பொழுது உக்ரைனில் ஒரு குழப்பம் தொடங்கி புட்டீனை இழுக்கின்றது அதில் என்ன முடிவினை புட்டீன் எடுப்பார் என்பதில்தான் இருக்கின்றது அடுத்த கட்ட நகர்வுகள் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

More Watch Videos