Tamilnadu

#Breaking நினைத்து பார்க்க முடியாத இடத்தில் "வெற்றியை " பதிவு செய்த பாஜக அத்தனை நபர்களுக்கும் ஆப்பு!!

Annamalai Bjp
Annamalai Bjp

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.


மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் தமிழக காவல்துறையினர், அரசு அலுவலர்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளார்கள்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் தற்போதைய நிலவரப்படி 110-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. தற்போது வரை அதிமுக 13 இடங்களிலும் மற்ற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


இதில் திராவிட கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்தும் விதமாக பாஜக சார்பில் 134 வார்டில் போட்டியிட்ட உமா ஆனந்தன் மிக பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்  5539 வாக்குகள் பெற்ற உமா ஆனந்தன் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளரை 2695 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தயுள்ளார், இதில் குறிப்பாக காலை முதலே உமா ஆனந்தன் 8 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றதாக திமுக எம்எல்ஏ TRP ராஜா பொய் செய்தியை பரப்பினார் மேலும் கலைஞர் செய்திகள், ONE INDIA போன்ற இணையதளங்களும் பொய் செய்தியை பரப்பின.

இந்த சூழலில் தான் ஆளும் கட்சியினர் நினைத்து பார்க்க முடியாத அளவில் உமா ஆனந்தன் வெற்றியை பதிவு செய்துள்ளார். இது மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக வெற்றி பெற்று தங்களது பலத்தை நிரூபித்துள்ளது.

More watch videos