இந்த பாட்டி ஞாபகம் இருக்கா? பாஜகவினர் செய்த தரமான சம்பவம்!vellamal paati
vellamal paati

வேலம்மாள் பாட்டி தனது சிரிப்பால் தமிழகத்தில் பலரது மனதினை வென்றவர், இவர் கையில் பணத்தை வைத்து கொண்டு சிரித்த சிரிப்பை கொண்டு தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற திமுகவினர் இதுதான் தளபதியின் ஆட்சி என சந்தோசம் கொண்டனர்.

மேலும் இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞரை நேரில் அழைத்து பாராட்டினார் முதலமைச்சர், இப்படி பல நல்ல விஷயங்கள் ஒரு புறம் நடந்தாலும் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் உன்ன உணவு இல்லை எனவும் நிவாரணம் வேண்டும் எனவும் வேலம்மாள் பாட்டி வேண்டுகோள் விடுத்து இருந்தார், ஆனால் இது குறித்து திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி மற்றும் வினோஜ் பி செல்வம் ஆகியோர் பாட்டியை நேரடியாக வீடு தேடி சென்று சந்தித்துள்ளனர், மேலும் அவருக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருள்களை வழங்கியுள்ளனர்.

இது குறித்து பாஜகவை சேர்ந்த இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம் தெரிவித்தது பின்வருமாறு :- அன்று பாட்டி வேலம்மாள் அவர்கள் தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண உதவியை பெற்றபோது, இல்லாத உலக சாதனை செய்ததுபோல திமுக உடன்பிறப்புகள் தம்பட்டம் அடித்தார்கள். ஒருபடி மேலே சென்று புகைப்படம் எடுத்த நபரை நேரில் அழைத்தும் பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

ஆனால் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கண்ணீர் மல்க உதவிகோரியும் அவரின் கூக்குரல் மட்டும் திமுகவினருக்கு கேட்கவே இல்லை! நாம் இன்று அவரை நேரில் சந்தித்து தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். 

அவர் சிரிப்பில் இறைவனை கண்டோம் என குறிப்பிட்டு இருக்கிறார், ஆட்சியில் இல்லாத போதும், நேரடியாக தேடி சென்று உதவியை வழங்கி சிறப்பான சம்பவம் செய்துள்ளது பாஜக.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.


Share at :

Recent posts

View all posts

Reach out