தமிழகத்தில் காவல்துறை சாதிய வெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது, விடுதலை சிறுத்தைகளுக்கு துரோகம் இழைக்கிறது என சமூகவலைத்தளங்களில் கதறி கொண்டு இருக்கிறார் திருமாவளவன், மேலும் வருகின்ற 29-ம் தேதி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
போதாத குறைக்கு ரவுடிகள் கைது நடவடிக்கை என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும், தலித் சமூகத்தை சேர்ந்தவர்களையும் காவல்துறை கைது செய்து வருகிறது இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வன்னியரசு கொந்தளிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என தெரிவிக்க, திராவிட கழக தலைவர் வீரமணியோ சபாஷ் என வரவேற்றுள்ளார் இது குறித்து வீரமணி குறிப்பிட்டதாவது :-
தமிழ்நாடு முதல் அமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களது பொறுப்பில் உள்ள காவல்துறையின் சிறப்பான சட்டம் - ஒழுங்கு மற்றும் மக்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமும், நம்பிக்கையும் ஏற்படும் வகையில் 23.9.2021 அன்று இரவு தொடங்கி 52 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை அனைவரது பாராட்டுதலையும் பெறுவது உறுதி.
தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக, சட்டம் - ஒழுங்குப் பராமரிப்புக்குரிய துறையின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள (டி.ஜி.பி.) சைலேந்திரபாபு அவர்களது அதிரடி உத்தரவுக்கிணங்க தமிழ்நாட்டில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டும், 7 நாட்டுத் துப்பாக்கிகள், 1110 பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதும் சரியான நடவடிக்கையாகும்!
அரசுக்கு மிகப் பெரிய சவால் கடந்த காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் ரவுடிகளின் அட்டகாசங்களும், கூலிப்படைகளின் சர்வ சாதாரணக் கொலைகளும் புதிதாகப் பொறுப் பேற்றுள்ள தி.மு.க. அரசுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தன.தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் பற்றிய பட்டியலை வைத்து, சரியான வியூகம் வகுத்து 870 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி, 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து மட்டும் 3 நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள் போன்ற 250 ஆயுதங்களைக் காவல் துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.
இந்த 'ஸ்டாமிங் ஆப்பரேஷன்' (Storming Operation)என்ற முற்றுகை செயல்பாடு நல்ல பலனை கொடுத்துள்ளது, கூலிப்படைகள் மலிந்து விட்டன என்பதை நடை பெறும் பல கொலைகளும், உடனடியாக அவர்கள் சரண் அடைவதும் தெள்ளத் தெளிவாகவே விளக்குவதாக உள்ளன !
சிறைக்குள்ளே கூலிப்படைத் தலைவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே அவர்கள் ஒரு 'நெட் ஓர்க்' போல அங்கிருந்தே தனது சீடர்களுக்கு கொலைக்குத் திட்டமிட போதிய கருத்துரைகள் வழங்கு வதாகப் பரவலாகப் பேச்சு பலமாகவே அடிபடுகிறது! ஏதோ ஓர் ஒப்பந்தம் போல மிகவும் 'விஞ்ஞான பூர்வமாக' யாரிடம் எவ்வளவு தொகை தர வேண்டும்; எந்த வழக்குரைஞரை வாதாட வைக்க வேண்டும்; ... அதுவரை அவ்வப்போது எவ்வளவு தொகையை கூலிப்படை உதவியை நாடியவர்கள் தர வேண்டும் என்பதெல்லாம் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன என்பவை வெளியே உலவும் கொடூரமான செய்தி களாகும்!
புது வாழ்வை வாழ செய்ய நடவடிக்கைகள் தேவைஇவர்களைக் கைது செய்வதோடு இவர்களில் தரம் பிரித்து, மனோ தத்துவ ரீதியில் பக்குவப்படுத்தி, புதுவாழ்வை வாழச் செய்ய முடியுமா? என்று ஆய்வு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்தால், குற்றங்கள் நிரந்தரமாகக் குறையக் கூடும்! திருந்தவே மாட்டார்கள் என்ற நிலையைக் கண்டறி யப்படுபவர்கள்மீது கடுமையாகச் சட்டங்கள் - நடவடிக்கைகள் பாயட்டும்!
சிறைச்சாலை, காவல்துறை, இத்தகைய குற்றமிழைப் போர் என எல்லோரும் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த ஒரு தொடர் நடவடிக்கை மூலமே இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்க முடியும்; இன்றேல் இது ஒரு நாள் பரபரப்புச் செய்தியாகவே முடிந்து விடக் கூடும் என்று தெரிவித்துள்ளார், அதாவது விசிக தரப்போ தங்கள் கட்சியினரை குறிவைத்து கைது செய்து வருவதாக குறிப்பிட்ட நிலையில், சபாஷ் காவல்துறை நடவடிக்கை சரியானது என வீரமணி வாழ்த்து மடல் எழுதியிருப்பது விசிக தலைமையின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாக உள்ளது.