முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் , பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து விமர்சனம் செய்ய தற்போது மிக பெரும் பதிலடியை சந்தித்து வருகிறார் . சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி யு.என் பொதுச்சபையில் உரையாற்றிய போது ஒரு சில இடங்கள் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளித்தது ,மேலும் யாரும் கைதட்டவில்லை என்பது இன்னும் ஏமாற்றம் ,ஐ.நா.வில் இந்தியாவின் நிரந்தரப் பணி மிகப்பெரிய அளவில் முட்டாள்தனமாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தார் .
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் பதிலடியை பதிவு செய்து வருகின்றனர் சமூகவலைத்தளத்தில் இந்திய அரசியல் குறித்து எழுதிவரும் சுந்தரராஜ சோழன் அதென்ன சினிமா கொட்டகையா? போறவன் வர்றவனை எல்லாம் அள்ளிக் கொண்டு போய் விசில் பறக்க வைக்க.கண்ணாடி திரும்பிருக்கு ஆட்டோ ஓடலைன்னு சொல்ற காமெடிதான் அஜித்தே பண்ணிட்டாப்டியே என குறிப்பிட்டுள்ளார் .
கொரோனா காரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள் குறைவான பங்கேற்பாளர்களை கொண்டு போதிய இடைவெளியுடன் நடைபெறுகிறது ,அப்போது நாற்காலிகள் இடைவெளியுடன் இல்லாமல் நிரம்பியா இருக்கும் என பதிலடி கொடுத்துள்ளார் , மற்றொருவரோ பிரதமர் நிகழ்ச்சியில் கைதட்டல் இல்லை என ஆதங்கப்படும் நீங்கள் நேற்று உங்கள் மகன் கலந்துகொண்ட நேற்றைய தேவகோட்டையில் நடந்த கட்சி கூட்டத்திற்கு சென்றிருந்தால் கைத்தட்டு என்ன மண்டை உடைப்பு சம்பவங்களே நடைபெற்றதே அதை பார்த்து ரசித்து இருக்கலாமே என கூறியுள்ளார் .
ரகு என்பவர் பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசுகிறீர்கள் உங்கள் மகனின் தொகுதியான சிவகங்கையில் கட்சி வளராமல் இருக்க நீங்கள் தான் கரணம் என நிர்வாகி ஒருவர் பேசினார் நீங்கள் கூட நாற்காலியில் அமருங்கள் என கூறுனீர்களே அங்கு கைதட்டல் பலமாக வந்ததே அதை பற்றி சிந்தித்தீர்களா ? சொந்த தொகுதியில் சொந்த கட்சி கூட்டத்தை 20 பேரை வைத்து நடத்த முடியவில்லை நீங்கள் நாற்காலி குறித்து பேசுகிறீர்களே வெட்கமாக இல்லையா என ட்விட்டரில் கேட்டுள்ளார் .
இன்னும்பல பதிலடிகள் சிதம்பரத்திற்கு பாஜகவினர் மற்றும் பாஜக ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்டு வருகிறது , பிரதமரின் நிகழ்ச்சியில் சீட் காலியாக இருக்கிறது என பதிவிட்ட சிதம்பரத்திற்கு ,தேவகோட்டையில் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நாற்காலி உடைந்ததையும் , சிதம்பரம் கலந்துகொண்ட மானாமதுரை கூட்டத்தில் சொந்த கட்சி நிர்வாகி பேசியதையும் எடுத்து போட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர் பாஜகவினர் . கார்த்தி சிதம்பரம் அவரை தொடர்ந்து சிதம்பரம் இருவரும் சொந்த கட்சியினரால் விரட்டப்பட்ட காட்சி