Tamilnadu

புரியாத மாதிரி பேசுறவங்களுக்கு இப்படி சொன்னாதான் புரியும்.. சந்தானம் டயலாக் சொல்லி புரியவைத்த விமர்சகர் !

Pr srinivasan debate
Pr srinivasan debate

தனியார் ஊடகத்தில் நடந்த விவாதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது வாரிசு அரசியலுக்கும், அரசியலில் வாரிசுகள் வருவதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைக்க சந்தானம் பட வசனத்தை பேசி அரசியல் விமர்சகர் பி.ஆர்.ஸ்ரீனிவாசன் நெறியாளருக்கு விளக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளாக கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்புச்சட்ட நாளாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நேற்று காலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயாடு, பிரதமர் மோடி,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய பிரதமர், 1950-க்கு பிறகு அரசியல்சாசன தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், சிலர் அதனை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாள் கொண்டாட வேண்டும். அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். ஜனநாயக நாட்டில் அரசியல் குழுக்கள் மிகவும் முக்கியம்.

இந்தியாவில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. . வாரிசு அரசியல் நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள், அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன.கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஒரே குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவிக்கக்கூடாது.

உட்கட்சி ஜனநாயகத்தை, மதிக்காத கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்கும். திறமைகள் அடிப்படையில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். வாரிசு அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது மதிப்பீடுகளை இழந்துவிட்டன. அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இதை மையமாக கொண்டு தனியார் ஊடகம் ஒன்று விவாதம் நடத்தியது அதில் கலந்து கொண்ட விமர்சகர் ஸ்ரீராம் வாரிசு அரசியல் என்றால் ஆட்சியில் அடுத்து யார் வருகிறார்கள் என்று பொருள், மேற்கு வங்கத்தில் மம்தா அவருக்கு பின் அவரது மருமகன், உத்திர பிரதேசத்தில் முலாயம் யாதவ் அவருக்கு பின் அவரது மகன் அகிலேஷ் யாதவ், ஆந்திராவில் தந்தை மறைவிற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி.

பீகாரில் லல்லு பிரசாத் அதன் பிறகு அவரது மகன் தேஜஸ்வி யாதவ் என பட்டியல் அடுக்கினார் இந்த பட்டியலை கவனத்தில் கொண்ட நெறியாளர் விஜயன் நீங்கள் சொன்ன அனைவருமே  ஜனநாயக ரீதியாக கட்சியில் செயற்குழு பொதுக்குழு என தாண்டி தானே வெற்றிபெற்று வந்து இருக்கிறார்கள், அப்படி இருக்கையில் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஸ்ரீனிவாசன் இரண்டு விரலை காட்டி ஒரு விரலை தொட சொல்வதற்கும் ஒரு விரலை காட்டி தொட சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா என புரியாதது போல் கேள்வி கேட்ட நெறியாளருக்கு புரியும் மொழியில் சந்தானம் ஒரு காமெடியில் ஜெயம் ரவியிடம் சொல்வது போல் சொல்லி புரிய வைத்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.