Tamilnadu

நான் மன்னிப்பு கேட்ட பின்பும் இப்படியா..! மதபோதகர் வாசிப்பு.. வச்சான் பாரு ஆப்பு!

Puela
Puela

சென்னை  குன்றத்தூரில் உள்ள CSI உயிர்ந்தெழுந்த மீட்பர் தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது மத போதகர் பியூலா செல்வராணி என்பவர் தேவ செய்தி கொடுப்பதாக பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார். பெண்களுக்கு குடும்பத்தில் பாதுகாப்பில்லை என்று பேச்சை தொடங்கிய அவர், பள்ளிக்கூடங்களில் சுத்தமாக பாதுகாப்பில்லை என்றார்.


தனது கணவர் பள்ளியில் ஆசிரியராக இருப்பதாகவும் , இருந்தாலும் பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும், ஆண் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல பெண் ஆசிரியைகளிடம் இருந்தும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி அவர்களது கடைகளுக்கு பொருள் வாங்கச்செல்லும் சிறுமிகளிடம் பொருட்கள் கொடுக்கும் போது அந்த கடைக்காரர் சிறுமிகளிடம் அத்துமீறுவதாக பேசியதால் சர்ச்சை உண்டானது. பியூலாவின் இந்த வீடியோ வைரலான நிலையில், மத போதகர் பியூலா செல்வராணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாடார் மகாஜன சபை மற்றும் பல்வேறு வியாபார அமைப்புகள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், இதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் முதலில் ஆடியோ வெளியிட்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

எப்படி வீடியோவில் வாய் துட்டுக்காக பேசினீர்களோ அதே போன்று மன்னிப்பு கேட்கவேண்டும் என பலரும் விடாமல் போதகரை  அவரது செல்போன் எண்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்துள்ளனர், இந்த சூழலில்தான் வீடியோ வெளியிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் போதகர்.

நான் தெரியாமல் வட்டார மொழியில் அவ்வாறு கூறிவிட்டேன் எனவும், நான் மன்னிப்பு கேட்ட. பின்பும் என்னை பற்றியும் எனது குடும்பத்தை பற்றியும் பேசுகிறீர்கள் என எழுதிய கடிதத்தை அப்படியே வாசித்துள்ளார் சர்ச்சை சர்ச் போதகர். எந்த ஒரு மதம், இனம், சமுதாயத்தையும் இழிவு படுத்த கூடாது என சட்டம் உள்ள நிலையில் தவறாக பேசிய போதகரை ஏன் தமிழக அரசு கைது செய்யவில்லை மன்னிப்பு கேட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா?

இதே போல் வேறொரு தரப்பு சர்ச்சை போதகரின் பிரிவை குறிப்பிட்டு பேசினால் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் எனவும், சமூகவலைத்தளங்களில் பாதிக்கப்பட்ட தரப்பு எதிர்கேள்வி எழுப்பி வருகிறது. பெண் போதகர் மன்னிப்பு கேட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.