Tamilnadu

"பசுமை தீபாவளி" குரூப்பை தங்கள் பாணியில் பங்கம் செய்த சத்குரு மற்றும் அண்ணாமலை !

satguru and annamalai
satguru and annamalai

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற இந்துகள் பண்டிகை வந்துவிட்டால் போதும், திடீர் சமூக ஆர்வலர்களும், தங்களை அறிவாளியாக கருதும் நபர்களும் இந்துக்களுக்கு அறிவுரை கூற வந்துவிடுவார்கள் என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வந்து கொண்டு பட்டாசு இல்லாமல்  பசுமை தீபாவளி கொண்டாடுவோம் என கிளம்பி இருக்கும் கும்பலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.


பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை குழந்தைகள் அனுபவிப்பதை தடுக்க காற்று மாசுபாடு குறித்த கவலை ஒரு காரணமல்ல.  அவர்களுக்காக உங்கள் தியாகமாக, 3 நாட்கள் உங்கள் அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள்.  பட்டாசு வெடித்து குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது வாகனங்கள் வெளியேற்றும் புகையை காட்டிலும், ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் ஒன்றும் ஆகிவிடாது, அவ்வளவு அக்கறை இருப்பவர்கள் உங்கள் கார்களை நிறுத்துவிட்டு நடந்து செல்லுங்கள் என பொளேர் பதிலடி கொடுத்துள்ளார் சத்குரு.  இந்த சூழலில் பல்வேறு தரப்பினரும் இந்த ஆண்டு அதிகமாக பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என குறிப்பிட்டு வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் பட்டாசு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,பட்டாசு வெடிக்கிற விஷயத்தில் நாங்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் அழுத்தமாக கூறியிருக்கிறோம், பட்டாசை தடை செய்யக் கூடாது என்று.

சுப்ரீம் கோர்ட் சொன்னதைப் போன்றுதான் பட்டாசுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 8.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. அதைப் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு என்பது கட்டுக்கதை. இந்தியாவில் பாரம்பரியமாக 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே பட்டாசு வெடிச்சிட்டு வாராங்க. அப்படியிருக்கையில் அன்னைக்கு மட்டும் தீபாவளிக்கு மாசுபடுதல் என்பது மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவது என்பதாகும்.

அமொிக்காவில் ஜீலை 14, ஆஸ்திரேலியாவில் சிட்னியில் டிசம்பா் 31இல் பட்டாசு வெடிக்கும் திருவிழாவில் அன்றைய தினம் மட்டும் மாசுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள். தீபாவளி என்பது நம்முடைய பாரம்பரிய பண்டிகை, கலாச்சாரமும் கூட. எனவே மக்கள் பாதுகாப்போடு சந்தோஷமாக பட்டாசு வெடிக்கலாம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சுற்று சூழல் மாசு என்பது கட்டுக்கதை என அண்ணாமலையும், அவ்வளவு காற்று மாசு குறித்து அச்சம் கொள்பவர்கள் மூன்று நாள் நடந்து அலுவலகத்திற்கு செல்லுங்கள் என சத்குருவும் தங்கள் பாணியில் பதிலடி கொடுத்துள்ளனர்.