Tamilnadu

ஓவராக பேசி மேடையில் பல்பு வாங்கிய சத்யராஜ்.. கட்டப்பா இல்லை இனி நீ சொத்தப்பா ..!

modi Stallin and sathiyaraj
modi Stallin and sathiyaraj

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் எந்த வருடம் தேர்தல் நடைபெறுகிறது என்பது கூட தெரியாமல் பச்சை குழந்தை போன்று வீர வசனம் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில்பலத்த கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.நிகழ்ச்சியில் பேச தொடங்கிய நடிகர் சத்யராஜ் தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுல்காந்திக்கு எனது பாராட்டுக்கள்.


ஒரு சிங்கத்தைப்போல அவர் நாடாளுமன்றத்தில் முழங்கினார். பெரியார், சமூக நீதி, காரல் மார்க்ஸை படித்தவர்கள் சிறந்த மனிதர்களாக இருக்க முடியும் என அளந்துவிட்டார் நம் மனிதர்களாக இருக்க வேண்டுமென்றால் முதலில் மனிதநேயம் நமக்குள் இருக்க வேண்டும். பெரியாரின் சமூக நீதியையும், காரல் மாக்சின் பொருளாதார கொள்கைகளையும் படித்தால் மட்டுமே நம்மால் அப்படி இருக்க முடியும் எனவும் புது இலக்கனம் கண்டு பிடித்துள்ளார் சத்யராஜ்.

மேலும் பேசியவர் திமுகவில் எல்லாரும் அண்ணாவின் தம்பி என அழைத்துக்கொள்வார்கள்.  திராவிட இயக்க வழக்கப்படி ராகுலை நான் தம்பி என்றும், முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்றும் அழைக்கிறேன்.மேலும் உங்களின் ஒருவன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்டாலின் என்ற பெயர் சூட்டப்பட்ட சம்பவம், பள்ளியில் சேர்வதற்கு ஸ்டாலின் என்ற பெயர் இடையூறாக இருந்ததால் பள்ளி மாற்றப்பட்ட விவரம், தெருக்களில் மு.க.ஸ்டாலின் போட்ட மேடை நாடகங்கள், ஸ்டாலினை எம்.ஜி.ஆர் பாராட்டிய சம்பவம் உள்ளிட்டவை என பேசிய சத்யராஜ் இறுதியில்

நேற்று சட்டமன்றத்தில் வெற்றி இன்று உள்ளாட்சி நாளை 2023-ல் நிச்சயம் வெற்றிதான் என தெரிவித்தார். அதாவது 2024-ம் ஆண்டுதான் நாடாளுமன்றத்திற்கு பொது தேர்தல் தேதி வருகிறது, ஆனால் அது கூட தெரியாமல் 2023-என வருடத்தையே மாற்றி பேசிவிட்டு பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் குழந்தை தனமாக இருக்கிறது இன்றுமுதல் நீ கட்டப்பா இல்லை சொதப்பல்பா என நெட்டிசங்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

சத்யராஜ் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.